சினிமா செய்திகள்

கீமோ தெரபி சிகிச்சையால் சோனாலி பிந்த்ரே கண்கள் பாதிப்பு + "||" + Sonali Bindra's eyes are affected by chemo therapy

கீமோ தெரபி சிகிச்சையால் சோனாலி பிந்த்ரே கண்கள் பாதிப்பு

கீமோ தெரபி சிகிச்சையால் சோனாலி  பிந்த்ரே கண்கள் பாதிப்பு
தமிழில் காதலர் தினம், கண்ணோடு காண்பதெல்லாம் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தவர் சோனாலி பிந்த்ரே. இந்தியில் முன்னணி நடிகையாக இருந்தார்.
2002–ல் இயக்குனரும் தயாரிப்பாளருமான கோடி பெல்லை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து ஒதுங்கினார். 43 வயதாகும் சோனாலி பிந்த்ரே சமீபத்தில் தனக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக அறிவித்து அதிர்ச்சி ஏற்படுத்தினார்.


இப்போது அமெரிக்காவில் தங்கி சிகிச்சை எடுத்து வருகிறார். இதற்காக தலைமுடியை எடுத்து மொட்டை தலையில் இருப்பதுபோன்ற படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். அழுதபடி உருக்கமாக பேசிய வீடியோவையும் தலையில் விக் வைத்த படத்தையும் வெளியிட்டார்.

அந்த படத்தின் கீழ், ‘‘நமது தோற்றம் அழகாக இருப்பது முக்கியம். அழகாக இருக்க எல்லோருக்குமே ஆசை இருக்கும். அது ஆழ்ந்த உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தும். மகிழ்ச்சியாக இருப்பதற்கான வி‌ஷயங்களை செய்ய வேண்டும். தனது தோற்றம் பற்றிய கர்வம் இருப்பது மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடாது’’ என்று கூறி இருந்தார்.

தற்போது கீமோ தெரபி சிகிச்சையால் தனது கண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்து உள்ளார். ‘‘கீமோ தெரபி சிகிச்சையால் எனது கண்களில் வித்தியாசமான அறிகுறைகளை பார்த்தேன். சில நேரம் என்னால் படிக்க முடியாமல் போனது. இதனால் பயந்தேன். இப்போது சரியாகி விட்டது’’ என்று கூறியுள்ளார்.