சினிமா செய்திகள்

அதிக இரைச்சலுடன் நள்ளிரவில் நடந்த ஷாருக்கானின் தீபாவளி விருந்தை நிறுத்திய போலீசார் + "||" + Police stopped by Shahrukh's Diwali feast

அதிக இரைச்சலுடன் நள்ளிரவில் நடந்த ஷாருக்கானின் தீபாவளி விருந்தை நிறுத்திய போலீசார்

அதிக இரைச்சலுடன் நள்ளிரவில் நடந்த ஷாருக்கானின் தீபாவளி விருந்தை நிறுத்திய போலீசார்
பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் தனது பிறந்த நாளை மும்பையில் கொண்டாடினார் அவருக்கு வாழ்த்து சொல்ல நள்ளிரவில் வீட்டின் முன்னால் ரசிகர்கள் திரண்டு நின்றனர்.
 நடிகர் ஷாருக்கான்  சில நிமிடங்கள் வெளியே வந்து அவர்களை சந்தித்தார். ரசிகர்கள் குவிந்ததால் வீட்டில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

பின்னர் தனது பிறந்தநாள் புகைப்படங்களை டுவிட்டரில் பகிர்ந்த ஷாருக்கான், ‘‘மனைவிக்கு கேட் ஊட்டி விட்டேன். குழந்தைகளுடன் விளையாடினேன். ரசிகர் குடும்பங்களை சந்தித்தேன். மகிழ்ச்சியான பிறந்தநாளாக அமைந்தது’’ என்று குறிப்பிட்டு இருந்தார். அதன்பிறகு தனது வீட்டின் அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் பிறந்த நாள் மற்றும் தீபாவளி விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்.


இந்தி நடிகர்–நடிகைகளை விருந்துக்கு அழைத்து இருந்தார். இதில் அமீர்கான், மாதவன், கரண் ஜோஹர், கரீனா கபூர், கத்ரினா கைப், அலியா பட், டாப்சி, ஷில்பா ஷெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விருந்து பயங்கர இசை சத்தத்துடன் அதிகாலை 3 மணிவரை நடந்தது.

இது அக்கம்பக்கத்தினருக்கு தொல்லையாக இருந்ததால் போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து அங்கு போலீசார் விரைந்து வந்து விருந்தை முடித்து விட்டு அனைவரும் கலைந்து செல்லுமாறு வற்புறுத்தினர். ஓட்டல் நிர்வாகத்தினரையும் எச்சரித்தனர். இதைத்தொடர்ந்து ஷாருக்கான் உடனடியாக அங்கிருந்து வெளியேறினார். மற்ற நடிகர் நடிகைகளும் கிளம்பி சென்றனர். இது இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

1. நடிகர் ஷாருக்கானை சந்திக்க முடியாததால் விரக்தி : பிளேடால் உடலை கீறிய ரசிகரால் பரபரப்பு
நடிகர் ஷாருக்கானை சந்திக்க முடியாததால் விரக்கியில் அவரது வீட்டு முன்பு பிளேடால் உடலை கீறிய ரசிகரால் பரபரப்பு ஏற்பட்டது.
2. பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பதற்காக நடிகர் ஷாருக்கான் வீட்டின் முன்பு குவிந்த ரசிகர்கள் மீது தடியடி
பாந்திராவில் நடிகர் ஷாருக்கானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க அவரது வீட்டின் முன்பு திரண்ட ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு உண்டானது.
3. நடிகர் சிவாஜி கணேசனின் 91வது பிறந்த நாள்; துணை முதல் மந்திரி ஓ. பன்னீர் செல்வம், மந்திரிகள் மரியாதை
நடிகர் சிவாஜி கணேசனின் 91வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு அரசு சார்பில் துணை முதல் மந்திரி ஓ. பன்னீர் செல்வம், மந்திரிகள் மரியாதை செலுத்தினர்.
4. மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை 2 வருடம் வரை கொண்டாட ஒடிசா அரசு முடிவு
ஒடிசா அரசு மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை 2 வருடம் வரை கொண்டாட முடிவு செய்துள்ளது.