பேனர் கலாசார விமர்சனம்: நடிகர் உதயநிதி விளக்கம்


பேனர் கலாசார விமர்சனம்: நடிகர் உதயநிதி விளக்கம்
x
தினத்தந்தி 5 Nov 2018 10:45 PM GMT (Updated: 5 Nov 2018 5:27 PM GMT)

தமிழில் ஒரு கல் ஒரு கண்ணாடி, இது கதிர்வேலன் காதல், நண்பேன்டா, கெத்து, மனிதன், இப்படை வெல்லும், நிமிர் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்த உதயநிதி ஸ்டாலின் சமீப காலமாக தி.மு.க கூட்டங்களில் பங்கேற்று வருகிறார்.

தமிழில் ஒரு கல் ஒரு கண்ணாடி, இது கதிர்வேலன் காதல், நண்பேன்டா, கெத்து, மனிதன், இப்படை வெல்லும், நிமிர் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்த உதயநிதி ஸ்டாலின் சமீப காலமாக தி.மு.க கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். அவருக்கு கட் அவுட் பேனர் வைத்து வரவேற்பு அளிப்பதற்கு விமர்சனங்கள் கிளம்புகின்றன.

கடந்த செப்டம்பர் மாதம் தஞ்சை தெற்கு மாவட்ட தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் உதயநிதியின் படமும் இடம்பெற்று இருந்தது. இதற்கு தி.மு.க தொண்டர் ஒருவர் தனது டுவிட்டரில் “முன்னணி தலைவர்கள் மேடையில் உங்கள் படம் இடம்பெற உங்கள் தகுதி என்ன” என்று கேட்டு இருந்தார்.

அதற்கு உதயநிதி “தவறு. மீண்டும் நடக்காது” என்று பதில் அளித்தார். இப்போது சென்னை வானகரத்தில் உதயநிதியை வரவேற்று வழிநெடுகிலும் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. இதை சமூக வலைத்தளத்தில் சுட்டிக்காட்டிய ஒருவர் “எதிர்க்கட்சி 100 பேனர் வைக்கிறார்கள் என்று ஆளும்கட்சியிடம் புகார் கொடுத்தால் அவர்கள் 1,000 பேனர்கள் வைப்பவர்களாக இருக்கிறார்கள். சாதாரண பேனர் விதிமுறைகளை கூட மதிக்க தெரியாத ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியை கொண்டது தான் தமிழகம்” என்று பதிவிட்டு இருந்தார்.

இதற்கு டுவிட்டரில் பதில் அளித்துள்ள உதயநிதி “தவறு. மீண்டும் நடக்காது” என்று கூறியுள்ளார். இந்த பதிலுக்காக உதயநிதியை டுவிட்டரில் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

Next Story