சினிமா செய்திகள்

அய்யப்பன் கோவிலில் பெண்களுக்கு எதிர்ப்பு: நடிகர் பிரகாஷ்ராஜ் கண்டனம் + "||" + Opposition to women in Ayyappan temple

அய்யப்பன் கோவிலில் பெண்களுக்கு எதிர்ப்பு: நடிகர் பிரகாஷ்ராஜ் கண்டனம்

அய்யப்பன் கோவிலில் பெண்களுக்கு எதிர்ப்பு: நடிகர் பிரகாஷ்ராஜ் கண்டனம்
கேரளாவில் உள்ள அய்யப்பன் கோவிலில் பெண்கள் வழிபடலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன.
கேரளாவில் உள்ள அய்யப்பன் கோவிலில் பெண்கள் வழிபடலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன. அய்யப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.

தற்போதைய அரசியல் பற்றி பிரகாஷ்ராஜ் ‘இருவுதெல்லவ பிட்டு’ என்ற பெயரில் கன்னடத்தில் புத்தகம் ஒன்றை எழுதி வெளியிட்டார். தற்போது அந்த புத்தகம் மலையாளத்தில் ‘நம்ம விழுங்குன்ன மவுனம்’ என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு சார்ஜாவில் நடக்கும் புத்தக கண்காட்சியில் வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரகாஷ்ராஜிடம் வாசகர்கள், அய்யப்பன் கோவிலுக்கு பெண்களை அனுமதிக்கும் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்து பிரகாஷ்ராஜ் கூறியதாவது:-

“நாம் எல்லோருமே பெண்களின் வயிற்றில் இருந்துதான் பிறந்தோம். எனவே பெண்கள் கடவுளை வழிபட வேண்டும் என்று விரும்பினால் அதை அனுமதிக்க வேண்டும். என் தாயை எந்த மதம் வழிபட மறுக்கிறதோ அது எனது மதமே அல்ல. எந்த பக்தர்கள் எனது அன்னையை வழிபட விடாமல் தடுக்கிறார்களோ அவர்கள் உண்மையான பக்தர்களும் அல்ல.

என் தாயை வழிபட விடாமல் எந்த கடவுள் தடுத்தாலும் அது உண்மையான கடவுளும் இல்லை. பெண்களுக்கான வழிபாட்டு உரிமையை மறுக்கும் கடவுள் எனது கடவுளும் இல்லை. பெண்களை பார்க்க விரும்பாத கடவுளை நானும் பார்க்க விரும்பவில்லை.”

இவ்வாறு பிரகாஷ்ராஜ் கூறினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...