சினிமா செய்திகள்

10 கோடி பார்வையாளர்களை கடந்த ஷாருக்கானின் ஜீரோ + "||" + zero trailer will cross 100m views in this week

10 கோடி பார்வையாளர்களை கடந்த ஷாருக்கானின் ஜீரோ

10 கோடி பார்வையாளர்களை கடந்த ஷாருக்கானின் ஜீரோ
ஒரே நாளில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட இந்திய திரைப்படத்தின் டிரெய்லர் சாதனை!
மும்பை,

அண்மையில் வெளியிடப்பட்ட நடிகர் ஷாருக்கானின் ஜீரோ பட டிரெய்லர், இதுவரை யூடியூபில் எந்த ஒரு இந்திய படத்தின் டிரெய்லரும் செய்திராத சாதனையை படைத்துள்ளது. 

பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாருக்கான் நடிப்பில் கிறிஸ்துமஸ் அன்று  வெளியாகவுள்ள திரைப்படம் தான் ஜீரோ. இதில் கத்ரினா கைஃப், அனுஷ்கா சர்மா, மாதவன், அபே தியோல் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீஸர் மற்றும் இரண்டு போஸ்டர்கள் வெளியான நிலையில் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறியது.

இந்நிலையில் ஷாருக்கானின் பிறந்த தினமான கடந்த நவம்பர் 2ஆம் தேதியன்று ஜீரோ படத்தின் டிரெய்லர், மும்பையில் நடைபெற்ற விழா ஒன்றில் வெளியிடப்பட்டது.

இப்படத்தின் டிரெய்லர் வெளியானது முதலே ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. டிரெய்லர் வெளியான 24 மணி நேரத்தில் 5.5 கோடி பார்வையாளர்கள்  பார்த்துள்ளனர். இதன் மூலம் வெளியிடப்பட்ட 24 மணி நேரத்தில் அதிகமாக பார்க்கப்பட்ட இந்திய திரைப்படத்தின் டிரெய்லர் என்ற சாதனை புரிந்துள்ளது. இரண்டாவது நாளில் 8.5 கோடி  பார்வையாளர்கள் அதனை பார்த்திருந்தனர். 

தற்போது டிரெய்லர் வெளியான 96 மணி நேரங்களுக்குள் (4 நாட்கள்) அதன் பார்வையாளர்கள் எண்ணிக்கை 10 கோடியாக  உயர்ந்துள்ளது. இது மேலும் ஒரு புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் இதற்கு முன்னதாக படைக்கப்பட்ட அனைத்து சாதனைகளையும் ஜீரோ டிரெய்லர்  முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்

1. ரவி சாஸ்திரிவுடன் காதல் பற்றிய வதந்திகளுக்கு பாலிவுட் நடிகை மறுப்பு
ரவி சாஸ்திரிவுடன் காதல் பற்றிய வதந்திகளுக்கு பாலிவுட் நடிகை நிம்ரத் கவுர் மறுப்பு தெரிவித்து உள்ளார்.
2. நான் ஒருபோதும், சினிமா உலகில் 100 சதவீதம் பாதுகாப்பாக இருப்பதாக உணரவில்லை - காத்ரீனா கைப்
நான் ஒருபோதும், சினிமா உலகில் 100 சதவீதம் பாதுகாப்பாக இருப்பதாக உணரவில்லை என பாலிவுட் நடிகை காத்ரீனா கைப் கூறி உள்ளார்.
3. பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
பிரபல பாலிவுட் சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். #RaviShankarAlok
4. ஊட்டியில் இன்று நடக்க இருந்த நடிகர் மிதுன் சக்கரவர்த்தியின் மகன் திருமணம் நிறுத்தம்
ஊட்டியில் இன்று நடக்க இருந்த நடிகர் மிதுன் சக்கரவர்த்தியின் மகன் திருமணம் ஒரு பெண்ணால் நிறுத்தப்பட்டது. #MithunChakravarthy
5. பாலிவுட்டில் நடிகரை விட நடிகைகளுக்கு அதிக சம்பளம் ஏன்?
பாலிவுட்டில் நடிகரை விட நடிகைகளுக்கு அதிக சம்பளம் என கூறப்படுகிறது