சினிமா செய்திகள்

இணையதளத்தில் கசிந்த அக்‌ஷராஹாசனின் கவர்ச்சி படங்கள்போலீசில் புகார் அளிக்க முடிவு + "||" + Aksharahasan's charismatic images Decided to report to the police

இணையதளத்தில் கசிந்த அக்‌ஷராஹாசனின் கவர்ச்சி படங்கள்போலீசில் புகார் அளிக்க முடிவு

இணையதளத்தில் கசிந்த அக்‌ஷராஹாசனின் கவர்ச்சி படங்கள்போலீசில் புகார் அளிக்க முடிவு
அக்‌ஷராஹாசனின் கவர்ச்சியான படங்கள் இணையதளத்தில் கசிந்து உலா வருகின்றன.
நடிகர் கமல்ஹாசனின் 2-வது மகள் அக்‌ஷராஹாசன். இவர் அஜித்குமார் நடிப்பில் வெளியான ‘விவேகம்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் ஆனார். ‘ஷமிதாப்’ உள்ளிட்ட சில பாலிவுட் படங்களிலும் நடித்திருக்கிறார்.

இந்தநிலையில் உள்ளாடைகள் மட்டுமே அணிந்தபடி அக்‌ஷராஹாசனின் கவர்ச்சியான படங்கள் இணையதளத்தில் கசிந்து உலா வருகின்றன. மேலும் சமூக வலைதளங்களிலும் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன. இதுகுறித்து பல விமர்சனங்களும் வெளியானது.

“இது ஒரு சினிமா படத்துக்காக எடுக்கப்பட்ட ஸ்டில்கள். வாய்ப்புகளை பொறுத்து இதுபோல புகைப்படங்கள் வரத்தான் செய்யும். இது தொழில் ரீதியான விஷயம். இதில் ஏன் இவ்வளவு விமர்சனங்கள்”, என்று அக்‌ஷராஹாசனும் விளக்கம் அளித்தார். மேலும் தனது அனுமதியில்லாமல் இந்த படங்களை வெளியிட்டது குறித்து போலீசில் புகார் அளிக்கவும் அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.