சினிமா செய்திகள்

தீபாவளி தினத்தில் ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த் + "||" + Rajinikanth met with fans

தீபாவளி தினத்தில் ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த்

தீபாவளி தினத்தில்
ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த்
ரசிகர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறினார்.
‘நான் அரசியலுக்கு வருவது உறுதி’, என்று கூறிய நடிகர் ரஜினிகாந்த், அதற்கான பணிகளையும் முன்னெடுத்தார். தனது ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை நியமித்தார். மேலும் மன்ற நிர்வாகிகளுக்கான கொள்கைகள் மற்றும் கட்டுப்பாடுகளையும் அறிவித்தார்.

அரசியலுக்கு வருவதற்கான ஆயத்த பணிகள் ஒரு புறம் இருந்தாலும், சினிமா மீதான அவரது கவனமும் குறையவில்லை. ஷங்கர் டைரக்‌ஷனில் ‘2.0’ நடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அதனைத்தொடர்ந்து அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையையொட்டி அவரது நடிப்பில் ‘பேட்ட’ படம் வெளியாக இருக்கிறது.

இந்தநிலையில் தீபாவளியன்று அவருக்கு வாழ்த்து சொல்ல சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டுக்கு தொண்டர்கள் படையெடுத்தனர். அப்போது ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த் கையசைத்து தீபாவளி வாழ்த்து கூறினார். இது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

1. ரசிகர்களின் சந்தோசமே நமது சந்தோசம்; சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் பேட்டி
ரசிகர்களின் சந்தோசமே நமது சந்தோசம் என சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் பேட்டியளித்து உள்ளார்.
2. மக்களின் விஸ்வாசம் இல்லாமல், நடிகர் ரஜினியால் முதல் அமைச்சர் ஆக முடியாது; அப்ஸரா ரெட்டி
மக்களின் விஸ்வாசம் இல்லாமல், நடிகர் ரஜினியால் முதல் அமைச்சர் ஆக முடியாது என அப்ஸரா ரெட்டி தெரிவித்துள்ளார்.
3. பாதிப்பு என்றால் மேகதாது அணை விவகாரத்தில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் -ரஜினிகாந்த்
பாதிப்பு என்றால் மேகதாது அணை விவகாரத்தில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் கூறி உள்ளார்.
4. நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளுக்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் டுவிட்டரில் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டுள்ளார்.
5. பிரதமர் மோடி நாட்டுக்கு நல்லது செய்ய நினைக்கிறார் , கமல் எனது நண்பர்- ரஜினிகாந்த் பேட்டி
பிரதமர் மோடி நாட்டுக்கு நல்லது செய்ய நினைக்கிறார் என்றும், கமல்ஹாசன் எனது நண்பர் அவரை அரசியல் போட்டியாக கருதவில்லை என்றும் ரஜினிகாந்த் கூறி உள்ளார்.