சினிமா செய்திகள்

சர்கார் பட விவகாரம் : இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் மீது போலீசில் புகார் + "||" + Sargar's film issue: Director AR On Murugadoss Complain to police

சர்கார் பட விவகாரம் : இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் மீது போலீசில் புகார்

சர்கார் பட விவகாரம் :  இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் மீது போலீசில் புகார்
சர்கார் பட விவகாரம் தொடர்பாக அந்த படத்தின் இயக்குனர் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
சென்னை,

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளையும் மீறி தீபாவளியன்று வெளியானது.

முழுக்க முழுக்க தமிழக அரசியலை விமர்சனம் செய்வது போன்ற காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. தனிமனித ஓட்டுரிமையின் அவசியத்தையும், பல்வேறு துறைகளின் அதிகாரிகள் செயல்பாடுகள் குறித்தும், அரசின் இலவச திட்டங்கள் குறித்தும் பேசப்பட்டுள்ளன.

தமிழக அரசியல் குறித்து சர்ச்சைக்குரிய வசனங்கள் இருப்பதாக கூறி அதிமுகவை சேர்ந்த அமைச்சர் கடம்பூர் ராஜு, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோர் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்,  சர்கார் பட விவகாரம் தொடர்பாக அந்த படத்தின் இயக்குனர் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

சர்கார் பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது தேச துரோக சட்டப்பிரிவில் நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தேவராஜன் என்பவர்  புகார் அளித்து உள்ளார்.

இலவசங்களை பெறும் மக்களை இழிவுபடுத்தும் வகையிலும், அரசாங்கத்திற்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையிலும் சர்கார் படம் இருப்பதாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. பொது இடத்தில் புகைபிடித்த தெலுங்கு நடிகருக்கு அபராதம்
பொது இடத்தில் புகை பிடித்ததாக தெலுங்கு நடிகர் ராம் போதினேனிக்கு ஐதராபாத் போலீசார் 200 ரூபாய் அபராதம் விதித்தனர்.
2. 14-வது மாடியில் வீடு வாங்கிய நடிகை தமன்னா ; சதுர அடி ரூ.80,778
மும்பையில் 14-வது மாடியில் சதுர அடி ரூ.80,778க்கு வீடு வாங்கியுள்ளார் நடிகை தமன்னா.
3. இன்று மாலை முதலமைச்சரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம் - நடிகர் நாசர்
இன்று மாலை முதலமைச்சரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து பின் நடிகர் நாசர் பேட்டி அளித்தார்.
4. நடிகர் விஜய் ரசிகர்களுக்கு போட்டியாக களமிறங்கிய அஜித் மற்றும் சூர்யா ரசிகர்கள்
நடிகர் விஜய் ரசிகர்களுக்கு போட்டியாக அஜித் மற்றும் சூர்யா ரசிகர்கள் களமிறங்கி உள்ளனர்.
5. நடிகர் சங்க தேர்தல் ரத்து : விஷால் அணியினர் சென்னை ஐகோர்ட்டில் முறையீடு
நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்தது தொடர்பாக விஷால் அணியினர் இன்று சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்து உள்ளனர்.