சினிமா செய்திகள்

மும்பை போலீசில் நடிகை அக்‌ஷராஹாசன் புகார் + "||" + Actress Akshara Hassan complains to police in Mumbai

மும்பை போலீசில் நடிகை அக்‌ஷராஹாசன் புகார்

மும்பை போலீசில் நடிகை அக்‌ஷராஹாசன் புகார்
எனது அந்தரங்க படங்களை எனக்கு தெரியாமல் யாரோ சட்ட விரோதமாக இணையதளத்தில் வெளியிட்டு உள்ளனர் என்று நடிகர் கமல்ஹாசனின் இரண்டாவது மகளான அக்‌ஷராஹாசன் போலீசில் புகார் அளித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசனின் இரண்டாவது மகளான அக்‌ஷராஹாசன் ‘‌ஷமிதாப்’ என்ற இந்தி படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழில் ‘விவேகம்’ படத்தில் நடித்துள்ளார். அக்‌ஷராஹாசனின் கவர்ச்சி படங்கள் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவை சமூக வலைத்தளங்களிலும் பரவி வருகிறது. 

இதனால் அதிர்ச்சியான அக்‌ஷராஹாசன், ‘‘சினிமா படப்பிடிப்புக்காக இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. இது எனது தொழில் ரீதியிலான வி‌ஷயம். இதற்கு ஏன் விமர்சனங்கள் கிளம்புகின்றன என்று புரியவில்லை. எனது அனுமதி இல்லாமல் இந்த படங்களை வெளியிட்டு உள்ளனர். இது குறித்து போலீசில் புகார் செய்வேன்’’ என்றார். 

இந்த நிலையில் மும்பை போலீசில் அக்‌ஷராஹாசன் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், ‘‘எனது அந்தரங்க படங்களை எனக்கு தெரியாமல் யாரோ சட்ட விரோதமாக இணையதளத்தில் வெளியிட்டு உள்ளனர். புகைப்படங்களை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார். 

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகிறார்கள். அக்‌ஷராஹாசனை புதிய படத்துக்கு ஒப்பந்தம் செய்வதாக அணுகி போட்டோ எடுத்த படக்குழுவினர் இந்த படங்களை வெளியிட்டு இருக்கலாமோ? என்ற சந்தேகம் கிளம்பி உள்ளது. எனவே அவர்களிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். படங்களை வெளியிட்டவர் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.