சினிமா செய்திகள்

ஆட்டோ டிரைவராக சாய்பல்லவி + "||" + Sai Pallavi as Auto Driver

ஆட்டோ டிரைவராக சாய்பல்லவி

ஆட்டோ டிரைவராக சாய்பல்லவி
நடிகை சாய்பல்லவி ஆட்டோ டிரைவராக உள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் டிரென்டிங் ஆகி வருகிறது.
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்த மாரி படம் 2015–ல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்து இருந்தார். தற்போது இதன் இரண்டாம் பாகம் ‘மாரி–2’ என்ற பெயரில் தயாராகி உள்ளது. இதில் தனுஷ் ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார். 

மலையாள நடிகர் டோவினோ தாமஸ் வில்லனாக வருகிறார். வரலட்சுமி சரத்குமார், வித்யா பிரதீப், ரோபோ சங்கர் ஆகியோரும் உள்ளனர். யுவன் ‌ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அதிரடி மற்றும் நகைச்சுவை படமாக மாரி–2 உருவாகி உள்ளது. தனுசே தயாரித்து உள்ளார். 

இதன் படப்பிடிப்பு முடிந்து டப்பிங், ரீ ரிக்கார்டிங், கிராபிக்ஸ் பணிகள் நடந்து வருகின்றன. அடுத்த மாதம் படம் திரைக்கு வருகிறது. இந்த நிலையில் படத்தில் சாய்பல்லவி ஆட்டோ டிரைவராக நடிக்கும் அராத்து ஆனந்தி என்ற கதாபாத்திரத்தின் முதல் தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். 

இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் பரவி இந்திய அளவில் டிரென்டிங் ஆகி வருகிறது. சாய் பல்லவியின் வித்தியாசமான தோற்றத்தை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். சாய்பல்லவி ஏற்கனவே தியா படத்தில் நடித்துள்ளார். சூர்யா ஜோடியாக என்.ஜி.கே படத்திலும் நடித்து வருகிறார்.