சினிமா செய்திகள்

‘மெரினா புரட்சி’ படத்துக்கு மீண்டும் தடை + "||" + Marina Puratchi The film is banned again

‘மெரினா புரட்சி’ படத்துக்கு மீண்டும் தடை

‘மெரினா  புரட்சி’  படத்துக்கு மீண்டும் தடை
‘மெரினா புரட்சி’ படத்தை பார்த்து விட்டு மீண்டும் தடை விதித்து 2–வது மேல் முறையீட்டு குழுவுக்கு அனுப்பி உள்ளார்கள்.
சென்னை மெரினா கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை மையமாக வைத்து ‘மெரினா புரட்சி’ என்ற படம் தயாராகி உள்ளது. எம்.ராஜ் இயக்கி உள்ளார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் இளைஞர்கள் எப்படி திரண்டார்கள், அதன் பின்னணியில் இருந்தவர்கள் யார்? இறுதியில் தடியடி நடந்தது ஏன்? போன்ற உண்மை சம்பவங்களை படத்தில் காட்சிப்படுத்தி உள்ளனர்.  படப்பிடிப்பை முடித்து திரைக்கு கொண்டு வர முடிவு செய்து கடந்த மாதம் தணிக்கை குழுவுக்கு அனுப்பினர். ஆனால் படத்துக்கு அனுமதி கொடுக்காமல் அந்த குழுவினர் தடை விதித்தனர். இதைத் தொடர்ந்து படத்தை நடிகை கவுதமி தலைமையிலான மேல் முறையீட்டு கமிட்டிக்கு அனுப்பினர். 

அந்த குழுவினரும் படத்தை பார்த்து விட்டு மீண்டும் தடை விதித்து 2–வது மேல் முறையீட்டு குழுவுக்கு அனுப்பி உள்ளார்கள். இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. படத்துக்கு மேல் முறையீட்டு குழு தடை விதித்தால் டெல்லியில் உள்ள டிரிபியூனலுக்கு சென்று தணிக்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்பது நடைமுறை.  

ஆனால் மெரினா புரட்சி படத்துக்கு அந்த வாய்ப்பை மறுத்து 2–வது குழுவுக்கு அனுப்பி இருப்பதாக படக்குழுவினர் கண்டித்துள்ளனர். காரணமின்றி நிராகரிப்பதும் காலதாமதம் செய்வதும் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. விலங்குகள் நல அமைப்பின் கடிதம்தான் இந்த தடைக்கு காரணமாக இருக்குமோ? என்று சந்தேகிக்கிறோம் என்றும் அவர்கள் கூறினார்கள்.