மாவட்ட செய்திகள்

தீபாவளி பண்டிகை:சென்னையில் 95 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம் + "||" + in Chennai 95 tons of fireworks wastes

தீபாவளி பண்டிகை:சென்னையில் 95 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்

தீபாவளி பண்டிகை:சென்னையில் 95 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து 95 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது.
சென்னை,

தீபாவளி பண்டிகையை மக்கள் பட்டாசு வெடித்து கோலாகலமாக கொண்டாடினர். இவ்வாறு வெடிக்கப்பட்ட பட்டாசுகளின் கழிவுகள் அனைத்தும் தற்போது அகற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் கடந்த 5-ந்தேதி முதல் நேற்று மாலை வரை மாநகராட்சி ஊழியர்கள் பட்டாசு கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த பணிகளில் பெருநகர சென்னை மாநகராட்சி ஊழியர்கள் சுமார் 19 ஆயிரம் பேர் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்கள் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து 95 டன் பட்டாசு கழிவுகளை அகற்றினர். இந்த கழிவுகள் அனைத்தும் மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி, கும்மிடிப்பூண்டி அருகே உள்ள தொழிற்சாலை கழிவு மேலாண்மை கூட்டமைப்பு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

மேற்கண்ட தகவல் அனைத்தும் பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.