சினிமா செய்திகள்

அமெரிக்காவில் பதிவாகும் பிரியங்கா சோப்ரா திருமணம் + "||" + Priyanka Chopra is married

அமெரிக்காவில் பதிவாகும் பிரியங்கா சோப்ரா திருமணம்

அமெரிக்காவில் பதிவாகும் பிரியங்கா சோப்ரா திருமணம்
நடிகை பிரியங்கா சோப்ராவும் பாப் பாடகர் நிக் ஜோனாசும் தங்களது திருமணத்தை அமெரிக்காவிலும், இந்தியாவிலும் பதிவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.
தமிழில் விஜய் ஜோடியாக ‘தமிழன்’ படத்தில் நடித்த பிரியங்கா சோப்ரா இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். குவாண்டிகா டி.வி. தொடரில் பிரபலமாகி ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். இவருக்கும், அமெரிக்காவில் புகழ்பெற்ற பாப் பாடகராக இருக்கும் நிக் ஜோனாசுக்கும் காதல் மலர்ந்தது. 

36 வயதாகும் பிரியங்கா சோப்ராவை விட நிக் ஜோனாஸ் 10 வயது குறைந்தவர். இவர்கள் நிச்சயதார்த்தம் கடந்த ஜூலை மாதம் மும்பையில் உள்ள பிரியங்கா சோப்ரா வீட்டில் பாரம்பரிய முறைப்படி நடந்தது. இதில் நிக் ஜோனாசும், அவரது குடும்பத்தினரும் கலந்துகொண்டனர். இவர்கள் திருமணம் அடுத்த மாதம் (டிசம்பர்) ஜோத்பூரில் நடக்கிறது. 

கடந்த மாதம் இருவரும் ஜோத்பூர் சென்று திருமணம் நடக்க உள்ள கோட்டையை பார்த்துவிட்டு வந்தனர். தற்போது திருமணத்துக்கான ஆடைகள், நகைகள் வாங்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். திருமணத்துக்கு பிறகு குடியேற அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள பெவர்லி ஹில்ஸ் பகுதியில் ஆடம்பர வீடு ஒன்றை விலைக்கு வாங்கி உள்ளனர். 

திருமணத்தை அமெரிக்காவிலும், இந்தியாவிலும் பதிவு செய்யும் முயற்சியிலும் இருவரும் ஈடுபட்டு உள்ளனர். பெவர்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் திருமண உரிம சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பங்களை இருவரும் சமர்ப்பித்து உள்ளனர். இந்த உரிமை சான்றிதழ் கிடைத்ததும் இருவரும் இந்தியா வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. “எனக்கு பிரதமராக ஆசை உள்ளது” -பிரியங்கா சோப்ரா
எனக்கு பிரதமராக ஆசை உள்ளது என்று நடிகை பிரியங்கா சோப்ரா கூறினார்.