சினிமா செய்திகள்

ரூ.1 கோடிக்கு நகைகள் வாங்கிய தீபிகா படுகோனே + "||" + Deepika Padukone Rs 1 crore jewelery purchased

ரூ.1 கோடிக்கு நகைகள் வாங்கிய தீபிகா படுகோனே

ரூ.1 கோடிக்கு நகைகள் வாங்கிய தீபிகா படுகோனே
திருமணத்துக்காக தீபிகா படுகோனே ரூ.1 கோடிக்கு நகைகள் வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தி நடிகை தீபிகா படுகோனேவும், நடிகர் ரன்வீர் சிங்கும் நீண்ட நாட்களாக காதலித்து இப்போது திருமணத்துக்கு தயாராகி உள்ளனர். இவர்கள் திருமணம் வருகிற 14 மற்றும் 15–ந் தேதிகளில் இத்தாலியில் நடக்கிறது. இதற்காக அங்குள்ள லேக் கோமா பகுதியில் 18–ம் நூற்றாண்டை சேர்ந்த மாளிகையை வாடகைக்கு எடுத்துள்ளனர். 

இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் இந்த மாளிகை உள்ளது. உறவினர்களையும் நண்பர்களையும் மும்பையில் இருந்து அழைத்து செல்ல சிறப்பு விமானத்துக்கும் ஏற்பாடு செய்துள்ளனர். இத்தாலியில் அவர்கள் தங்குவதற்கும் அறைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. திருமணத்துக்காக தீபிகா படுகோனே ரூ.1 கோடிக்கு நகைகள் வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மும்பை அந்தேரியில் உள்ள பிரபல நகைக்கடையில் வைரம் மற்றும் தங்க நகைகளை வாங்கி இருக்கிறார். பத்மாவத் படத்தில் அணிந்து இருந்ததை போன்று பெரிய நகைகளை அவர் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. ரன்வீர் சிங் அணிவதற்கு தங்க சங்கிலியும் வாங்கி உள்ளார். 

கடையை மூடிவிட்டு பணியாளர்கள் வீடு திரும்பும்போது தீபிகா படுகோனே வந்து ரூ.1 கோடிக்கு நகைகளை வாங்கி சென்றதாக கூறப்படுகிறது.