சினிமா செய்திகள்

‘சர்கார்’ வசூல் ரூ.125 கோடியை தாண்டியது + "||" + Sarkar collections Rs 125 crore

‘சர்கார்’ வசூல் ரூ.125 கோடியை தாண்டியது

‘சர்கார்’ வசூல் ரூ.125 கோடியை தாண்டியது
விஜய்யின் சர்கார் படம் எதிர்ப்பை மீறி வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது.
அமைச்சர்கள் எதிர்ப்பாலும், அ.தி.மு.க.வினர் போராட்டங்களாலும் சர்கார் பட தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து உள்ளதாக தியேட்டர் அதிபர்கள் தரப்பில் கூறப்படுகிறது. எதிர்ப்புகள் படத்துக்கு விளம்பரம் தேடி தந்துள்ளது என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள். 

உலகம் முழுவதும் சர்கார் 2 நாட்களில் ரூ.100 கோடி வசூலித்ததாகவும், இந்திய அளவில் இந்த தொகை 3 நாட்களில் கிடைத்தது என்றும் கூறுகிறார்கள். தமிழ்நாட்டில் பாகுபலி வசூல் சாதனையை முறியடித்துள்ளது என்கின்றனர். தமிழகத்தில் மட்டும் 3 நாட்களில் ரூ.65 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. 

சென்னையில் முதல் நாளில் மட்டும் ரூ.2.37 கோடியும், 2–வது நாள் ரூ. 2.32 கோடியும் வசூலித்துள்ளது. தொடர்ந்து ரூ.2 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி வருவதாக கூறப்படுகிறது. வெளிநாடுகளிலும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. ஏற்கனவே விஜய்யின் துப்பாக்கி, கத்தி, பைரவா, தெறி, மெர்சல் ஆகிய படங்கள் வசூலில் ரூ.100 கோடியை தாண்டியதாக கூறப்படுகிறது. 

அந்த பட்டியலில் சர்கார் படமும் சேர்ந்துள்ளது. சர்கார் படம் ரூ.200 கோடி வரை வசூல் ஈட்டும் என்று எதிர்பார்ப்பதாக தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க இணை செயலாளர் ஸ்ரீதர் தெரிவித்தார். 

அவர் கூறும்போது, ‘‘சர்காருக்கு எதிரான போராட்டம் படத்துக்கு பெரிய விளம்பரமாக அமைந்துள்ளது. வசூலில் பாதிப்பு ஏற்படவில்லை. எதிர்ப்புக்கு பிறகு படத்தில் என்னதான் இருக்கிறது என்று பார்ப்பதற்கு மக்கள் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டு கூட்டம் அதிகம் வருகிறது. 3 நாட்களில் வசூல் ரூ.125 கோடியை தாண்டி உள்ளது’’ என்றார்.