சினிமா செய்திகள்

‘2.0’ படத்தில் ‘‘எமிஜாக்சனுக்கு ‘டப்பிங்’ பேசியது சவாலாக இருந்தது’’–ரவீணா ரவி + "||" + Dumping speaking to Emy Jackson was a challenge -Revina Ravi

‘2.0’ படத்தில் ‘‘எமிஜாக்சனுக்கு ‘டப்பிங்’ பேசியது சவாலாக இருந்தது’’–ரவீணா ரவி

‘2.0’ படத்தில் ‘‘எமிஜாக்சனுக்கு ‘டப்பிங்’ பேசியது சவாலாக இருந்தது’’–ரவீணா ரவி
எமிஜாக்சனுக்கு ‘டப்பிங்’ பேசியது மிகப்பெரிய சவாலாக இருந்தது என்று ரவீணா ரவி கூறினார்.
தமிழ் தெரியாத பல முன்னணி கதாநாயகிகளுக்கு இரவல் குரல் (டப்பிங்) கொடுத்த ரவீணா ரவி, தற்போது நடிகையாகவும் மாறியிருக்கிறார். இனிமையான குரல் மட்டுமல்லாமல், அதை எப்படி சிறப்பாக பேசுவது என்பதில், இவர் தேர்ந்தவர்.

இவரிடம், ‘‘பல கதாநாயகிகளுக்கு இரவல் கொடுக்கிறீர்கள். அப்படி கொடுத்ததில், எந்த நடிகைக்கு இரவல் குரல் கொடுக்க சிரமப்பட்டீர்கள்?’’ என்று கேட்கப்பட்டது. ரவீணா ரவி சிரித்தபடி பதில் அளித்தார்.

‘‘படங்களுக்கு டப்பிங் செய்வதில், சில சவால்கள் உள்ளன. நாம் டப்பிங் பேசும் பெண் கதாபாத்திரங்களின் இயல்புகளை புரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் எந்த காட்சிக்கு எப்படி பேச வேண்டும் என்பது நமக்கு புரியும்.

‘2.0’ படத்தில், எமிஜாக்சனுக்கு ‘டப்பிங்’ பேசியது மிகப்பெரிய சவாலாக இருந்தது. காரணம், நான் டப்பிங் பேசும்போது, அது முழுக்க ‘கிரீன்மேட்’ காட்சிகளாக இருந்தது. அதன் சூழலை கற்பனை செய்து சரியான உணர்வை கொடுக்க நிறைய சிரமப்பட்டேன்.’’

இவ்வாறு ரவீணா ரவி கூறினார்.

இவர் இப்போது, ‘காவல் துறை உங்கள் நண்பன்’ படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். டப்பிங் கலைஞராக இருந்து கொண்டே நடிப்பது சுமையாக தெரியவில்லையா?’’ என்று கேட்டபோது–

‘‘என் முதல் படமான ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தில் நான் நடித்த கதாபாத்திரத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டது, ‘காவல் துறை உங்கள் நண்பன்’ படம். இதில், கதாநாயகனின் மனைவியாக, வேலைக்கு போகும் ஒரு பெண் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறேன். என் வாழ்க்கையில் நடக்கும் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம், வாழ்க்கையின் போக்கை மாற்றுகிறது.

நிஜவாழ்க்கையில் அதுபோன்ற சூழ்நிலைகளை நான் எதிர்கொண்டதில்லை. அதனால் நடிப்பு பயிற்சி மூலம் என்னை தயார் செய்ய வேண்டியிருந்தது.

சமகால உலகில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து, ‘காவல்துறை உங்கள் நண்பன்’ படம் பேசுகிறது. ஆனாலும் ஒரு சாதாரண மனிதனுக்கும், காவல் துறை அதிகாரிக்கும் இடையேயான பிணைப்பு படத்தின் குறிப்பிடத்தக்க முக்கிய அம்சமாக இருக்கும்’’ என்கிறார் ரவீணா ரவி.