சினிமா செய்திகள்

நடிகை கடத்தல் வழக்கில் சிக்கிய திலீப் வெளிநாடு செல்ல அனுமதி + "||" + Dileep in the actress kidnapping case allowed to go abroad

நடிகை கடத்தல் வழக்கில் சிக்கிய திலீப் வெளிநாடு செல்ல அனுமதி

நடிகை கடத்தல் வழக்கில் சிக்கிய திலீப் வெளிநாடு செல்ல அனுமதி
நடிகை கடத்தல் வழக்கில் சிக்கிய திலீப்புக்கு, வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

கேரளாவில் நடிகையை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் 85 நாட்கள் சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையானார். கொச்சி அங்கமாலி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவின் பேரில் பாஸ்போர்ட்டை கோர்ட்டிலும் ஒப்படைத்து விட்டார்.

பின்னர் துபாயில் உணவகம் திறப்பு விழாவில் கலந்து கொள்ள 7 நாட்கள் பாஸ்போர்ட்டை அவரிடம் வழங்க கோர்ட்டு அனுமதி வழங்கியது. துபாய் சென்று வந்ததும் மீண்டும் பாஸ்போர்ட்டை கோர்ட்டில் ஒப்படைத்து விட்டார். இந்த நிலையில் திலீப் தற்போது நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு வருகிற 16-ந்தேதி முதல் அடுத்த மாதம் 31-ந்தேதி வரை ஜெர்மனியில் நடக்க உள்ளது.

இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக பாஸ்போர்ட்டை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி எர்ணாகுளம் முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் திலீப் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையில் அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்தார்.

வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் திலீப் வெளிநாடு சென்றால் சாட்சிகளை கலைத்து விடுவார் என்று அவர் வாதிட்டார். படப்பிடிப்புக்காக திலீப் செல்லும் வெளிநாடுகள், தங்கும் இடம் போன்ற விவரங்களை கோர்ட்டு கேட்டு இருந்தது. அவற்றை ஒப்படைத்ததும் திலீப் வெளிநாடு செல்ல கோர்ட்டு அனுமதி வழங்கியது. பாஸ்போர்ட்டும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.