சினிமா செய்திகள்

”சர்கார்” வெற்றியைக் கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர் + "||" + sarkar team celebrates the success of the film

”சர்கார்” வெற்றியைக் கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்

”சர்கார்” வெற்றியைக் கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்
”சர்கார்” வெற்றியைக் கேக் வெட்டி நடிகர் விஜய் உட்பட படக்குழுவினர் கொண்டாடிய படம் வைரலாகி வருகிறது.
சென்னை,

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார் . கதை திருட்டு உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளை தாண்டி தீபாவளியன்று இப்படம் வெளியாகி பெரும் வசூல் சாதனை படைத்து வருகிறது.

இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், பழ கருப்பையா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ள வரலட்சுமி சரத்குமாருக்கு ஜெயலலிதாவின் இயற்பெயர் என கூறப்படும் கோமளவல்லி எனும் பெயர் சூட்டப்பட்டு இருந்தது. மேலும் படத்தில் தமிழக அரசின் இலவச திட்டங்களை விமர்சிப்பது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சை காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக கூறி அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இதையடுத்து, சர்ச்சைக்குரியதாக கூறப்பட்ட நான்கு காட்சிகளை படக்குழு நீக்க ஒப்புக்கொண்டது. இதன்படி, அந்த நான்கு காட்சிகளும் நீக்கப்பட்டு தற்போது திரையரங்கில் சர்கார் படம் ஓடிக்கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் ‘சர்கார்’ படத்தின் பிரம்மாண்டமான வெற்றியை படக்குழு கொண்டாடி மகிழ்ந்திருக்கிறது. இக்கொண்டாட்டத்தில் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ், ஏ.ஆர்.ரகுமான், வரலட்சுமி, கீர்த்தி சுரேஷ், பாடலாசிரியர் விவேக் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டுள்ளனர். மிக்சி, கிரைண்டர் வடிவிலான கேக் ஒன்றை வெட்டியும் படக்குழுவினர் வெற்றியைக்கொண்டாடியுள்ளது.  

இந்த கேக்கில் மெழுகுவர்த்தி ஒன்றை வைப்பது போன்று ஏ.ஆர்.ரகுமான் தனது சமூகவலைத்தளத்தில் படமொன்றை பகிர்ந்திருக்கிறார். இது விஜய்யின் கை தான் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். மிக்சி, கிரைண்டர் வடிவிலான கேக் வைத்து படக்குழுவினர் கொண்டாடியதை சமூக வலைதளங்களில் பலவாறாக கருத்து தெரிவித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. சர்ச்சைகளுக்கு மத்தியில், ‘சர்கார்!’
விஜய் நடித்து, ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்‌ஷனில், தீபாவளி விருந்தாக திரைக்கு வந்த படம், ‘சர்கார்.’
2. புகைப்பிடிக்கும் காட்சி : கேரளாவில் விஜய் மீது வழக்கு
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படம் தீபாவளிக்கு வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படம் திரைக்கு வருவதற்கு முன்பே சர்ச்சைகளில் சிக்கியது.
3. ‘சர்கார்’ வசூல் ரூ.125 கோடியை தாண்டியது
விஜய்யின் சர்கார் படம் எதிர்ப்பை மீறி வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது.
4. ‘சர்கார்’ படம் திரையிட்ட தியேட்டர் மேலாளர் மீது தாக்குதல் மாநிலம் முழுவதும் அ.தி.மு.க.வினர் போராட்டம்
திருப்பூரில் ‘சர்கார்’ படம் திரையிட்ட தியேட்டர் மேலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
5. டைரக்டர் முருகதாசை கைது செய்ய தடை ஐகோர்ட்டு உத்தரவு
‘சர்கார்’ படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசை வருகிற 27-ந் தேதி வரை கைது செய்யக் கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...