சினிமா செய்திகள்

சினிமா ஒளிப்பதிவாளர் டி.எஸ்.வினாயகம் மரணம் + "||" + Cinematographer DS Vinayagam is dead

சினிமா ஒளிப்பதிவாளர் டி.எஸ்.வினாயகம் மரணம்

சினிமா ஒளிப்பதிவாளர் டி.எஸ்.வினாயகம் மரணம்
சினிமா ஒளிப்பதிவாளர் டி.எஸ்.வினாயகம் மரணம் அடைந்தார்.
சென்னை,

சினிமா ஒளிப்பதிவாளர் டி.எஸ்.வினாயகம், சென்னையில் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 78.

டி.எஸ்.வினாயகம், பிரபல ஒளிப்பதிவாளர் விஸ்வநாத்ராயிடம் உதவி ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து, ஒளிப்பதிவாளராக உயர்ந்தவர். ஏ.சி.திருலோகசந்தர் டைரக்டு செய்த படங்களுக்கு இவர் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தார். எஸ்.பி.முத்துராமன் இயக்கிய 15 படங்களுக்கு இவர் ஒளிப்பதிவு செய்து இருந்தார்.


கடந்த சில மாதங்களாக இவர் உடல்நலக்குறைவாக இருந்தார். சென்னை வட பழனி கங்கையம்மன் கோவில் தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்த இவர், காலை 9 மணிக்கு வீட்டிலேயே மரணம் அடைந்தார். அவருடைய இறுதிச்சடங்கு நாளை (புதன்கிழமை) நடக்கிறது. அதன் பிறகு குன்றத்தூர் அருகில் உள்ள பூந்தண்டலம் கிராமத்தில் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

மரணம் அடைந்த டி.எஸ்.வினாயகத்துக்கு சாந்தகுமாரி என்ற மனைவியும், ரவிராஜ், பார்த்திபன் என்ற 2 மகன்களும் இருக்கிறார்கள்.