சினிமா செய்திகள்

டீசர் வெளியீட்டு விழாவில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட பிரபலம் அதிர்ச்சியில் நடிகை + "||" + Kajal Agarwal left visibly embarrassed after popular technician kisses her on stage

டீசர் வெளியீட்டு விழாவில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட பிரபலம் அதிர்ச்சியில் நடிகை

டீசர் வெளியீட்டு விழாவில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட பிரபலம் அதிர்ச்சியில் நடிகை
மேடையில் வைத்து முத்தமிட்ட பிரபல தொழில்நுட்ப கலைஞர், அதிர்ச்சியடைந்த காஜல் அகர்வால்.
ஐதராபாத் 

பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ், காஜல் அகர்வால் மற்றும் மெஹ்ரின் பிர்ஸாடா, நடித்த தெலுங்கு படம்   கவச்சம் விரைவில் வெளியாக உள்ளது. இதன் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படத்தில் நடித்துள்ள பெலம்கொண்டா ஸ்ரீனிவாஸ், மெஹ்ரின் பிர்ஸாடா, காஜல் அகர்வால், இயக்குனர் ஸ்ரீனிவாச மமிலா, இசை இசையமைப்பாளர் எஸ்.எஸ்.தாமான் மற்றும் பிற குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில்  காஜல் அகர்வாலுக்கு  சங்கடத்தை ஏற்படுத்திய ஒரு மோசமான நிகழ்ச்சி நடைபெற்றது.  பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இந்த படத்தின் படபிடிப்பின் போது  ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து  காஜல் அகர்வால் கூறினார்.

ஒவ்வொரு யூனிட் உறுப்பினருடனும் தனது எண்ணங்களை தெரிவித்தனர். அதே சமயத்தில் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் சோட்டா கே நாயுடு  காஜல் அகர்வாலை பற்றி குறிப்பிடும்போது,  காஜல் அகர்வாலை கட்டிபிடித்து முத்தம் கொடுத்தார். இதனை பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதை எதிர்பாராத காஜல் அகர்வாலும் இரண்டு விநாடிகள் அதிர்ச்சியடைந்தார்.

சில ஜாடை  வார்த்தைகளால் காஜல் அகர்வால் அதை மூடிவிட முயன்றாலும்,  இந்த திடீர் நடவடிக்கையால் அவர் குழம்பிப் போயிருந்தார் என்பது தெரிந்தது. காஜல் அகர்வால் "சன்ஸ் பீ டான்ஸ்" எனவும் கூறினார், அவர் அவரை முத்தமிட்ட பிறகு சாதாரணமாக நடந்து கொள்ள முயற்சித்தார். இது உண்மையில், ஒரு பெண்ணின்  அனுமதியில்லாமல் முத்தமிட்ட ஒரு மோசமான தருணம், அதுவும் ஒரு பெரிய நிகழ்ச்சியில் என  கூறப்பட்டது.

சரி, இந்த சம்பவத்தை பற்றி டுவிட்டரில் எதிர்மறையான பெரிய அலை உள்ளது. காஜல் அகர்வால் ரசிகர்கள் #BanChotaKNaidu என்ற ஹேஸ்டேகை உருவாக்கி சமூக வலைதளத்தில் விமர்சித்து வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. 5 மாநில தேர்தல் முடிவுகள் : பாரதீய ஜனதா தனது செல்வாக்கை இழந்துள்ளது-நடிகர் ரஜினிகாந்த்
5 மாநில தேர்தல் முடிவுகள் மூலம் பாரதீய ஜனதா தனது செல்வாக்கு இழந்ததை காட்டுகிறது என நடிகர் ரஜினிகாந்த் கூறி உள்ளார்.
2. கர்ப்பம் குறித்த வதந்தி ; நீங்கள் முட்டாள் ஆகிவிடுவீர்கள் - அனுஷ்கா சர்மா கோபம்
கர்ப்பம் குறித்த வதந்திக்கு நடிகை அனுஷ்கா சர்மா கோபமாக பதில் அளித்து உள்ளார்.
3. பிரபல நடிகை படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கினார்?
பிரபல மலையாள நடிகை படப்பிடிப்பின் போது விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
4. நடிகர் ரஜினிகாந்தின் 2.O திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.500 கோடி வசூல்
ரஜினிகாந்த் நடித்து ஷங்கர் இயக்கியுள்ள 2.0 படத்தின் வசூல் உலகம் முழுவதும் 500 கோடி ரூபாயை எட்டியுள்ளது. #2Point0
5. இந்தியன்-2 படம்தான் எனது திரை உலக பயணத்தில் கடைசி படமாக இருக்கும் - கமல்ஹாசன்
இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறேன். இந்த படம்தான் எனது திரை உலக பயணத்தில் கடைசி படமாக இருக்கும் என கமல்ஹாசன் கூறி உள்ளார்.