சினிமா செய்திகள்

கலிபோர்னியா தீவிபத்தில் வீடுகளை இழந்த ஹாலிவுட் நடிகர்கள் + "||" + Hollywood actors who lost homes in California fire

கலிபோர்னியா தீவிபத்தில் வீடுகளை இழந்த ஹாலிவுட் நடிகர்கள்

கலிபோர்னியா தீவிபத்தில் வீடுகளை இழந்த ஹாலிவுட் நடிகர்கள்
அமெரிக்காவில் கலிபோர்னியா பகுதியில் காட்டுத்தீ பரவி பெரிய சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.
கலிபோர்னியா   பகுதியில் வசித்த 2 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டனர்.  ஆயிரக்கணக்கான வீடுகள் எரிந்து நாசமானது. பழத்தோட்டங்களுடன் கட்டி இருந்த சொகுசு வீடுகளும் காட்டுத்தீக்கு தப்பவில்லை.

நூற்றுக்கணக்கான சொகுசு கார்களும் எரிந்து உருக்குலைந்தன.  இந்த காட்டுத்தீயில் 42 பேர் பலியாகி இருப்பதாக கூறப்படுகிறது. ஹாலிவுட் நட்சத்திரங்கள் லேடி காகா, கிம் கார்தாஷியான், கன்யெ வெஸ்ட் ஆகியோரின் வீடுகள் எரிந்துள்ளன.

ஹாலிவுட் அதிரடி கதாநாயகன் ஜெரார்டு பட்லர் தனது வீடு முற்றிலும் எரிந்து நாசமாகி விட்டதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்து உள்ளார். எரிந்த வீட்டின் முன்னால் நின்று செல்பி எடுத்தும் வெளியிட்டுள்ளார். இவர் டிராக்குல்லா, ஷூட்டர்ஸ், த பாண்டம் ஆப் ஒபேரா உள்பட பல படங்களில் நடித்துள்ளார். பிக் பிஷ், போல்ட், த நைட் பிபோர் உள்பட பல படங்களில் நடித்துள்ள மிலே சைரஸின் வீடும் தீயில் சாம்பலாகி உள்ளது. இவர் தனது செல்லப் பிராணிகளுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியதாக தெரிவித்து உள்ளார்.

ஆஸ்கார் விருது பெற்ற த ஷேப் ஆப் வாட்டர் படத்தின் இயக்குனர் குயில்லெர்மோ டெல் டோராவின் வீடும் தீயில் நாசமாகி உள்ளது. இவர் பசிபிக் ரிம், ஹெல்பாய், கிரிம்சன் பீக் ஆகிய படங்களையும் டைரக்டு செய்துள்ளார். தி எக்ஸ்பேண்டபிள்ஸ் 2, எம்பயர் ஸ்டேட், இண்டிபண்டன்ஸ் டே, ரிசர்ஜன்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள லயாம் ஜெம்ஸ் வொர்த்தின் வீடும் எரிந்து நாசமானது.