சினிமா செய்திகள்

‘மீ டூ’வில் சிக்கியதால், சினிமா சங்கத்தில் இருந்து நடிகர் அலோக் நாத் நீக்கம் + "||" + Actor Alok Nath dismissed from the cinema club because he was caught in 'Me Too'

‘மீ டூ’வில் சிக்கியதால், சினிமா சங்கத்தில் இருந்து நடிகர் அலோக் நாத் நீக்கம்

‘மீ டூ’வில் சிக்கியதால், சினிமா சங்கத்தில் இருந்து நடிகர் அலோக் நாத் நீக்கம்
பிரபல இந்தி நடிகர் அலோக் நாத். இவர் ஏராளமான படங்களில் தந்தை வேடத்தில் நடித்து இருக்கிறார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
இந்தி நடிகர் அலோக் நாத் மீது இந்தி பட பெண் இயக்குனர் விண்டா நந்தா பாலியல் புகார் கூறினார்.

இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில், அலோக் நாத்துக்கு நான் தயாரித்த தாரா டி.வி. தொடரின் நாயகி மீது ஆசை ஏற்பட்டு பாலியல் தொல்லை கொடுத்தார். குடித்துவிட்டு படப் பிடிப்பு அரங்குக்குள் வந்து கதாநாயகி மீது விழுந்தார். அந்த நடிகை அவரை ஓங்கி அறைந்தார்’’ என்று கூறியிருந்தார்.


‘‘ஒரு நாள் அந்த நடிகர் விருந்து நிகழ்ச்சிக்கு அழைத்து சென்று மதுவில் ஏதோ கலந்து என்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார்’’ என்றும் குற்றம்சாட்டி இருந்தார். இதுபோல் மேலும் 2 நடிகைகளும் அலோக்நாத் மீது பாலியல் புகார் கூறினார்கள். தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக விண்டா நந்தா மீது அலோக்நாத் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த நிலையில் சினிமா மற்றும் சின்னத்திரை நடிகர் சங்கம் இதுகுறித்து விசாரணை நடத்த அலோக்நாத் விண்டா, நந்தா ஆகியோருக்கு அழைப்பு விடுத்தது. அந்த அழைப்பை அலோக்நாத் நிராகரித்து விட்டார். இதைத் தொடர்ந்து மீ டூ புகார் காரணமாக சங்கத்தில் இருந்து அலோக்நாத் நீக்கப்படுவதாக சினிமா மற்றும் சின்னத்திரை நடிகர் சங்கம் அறிவித்து உள்ளது.