சினிமா செய்திகள்

குண்டு வெடிப்பு, தீவிபத்தை குறிப்பிட்டு திருமணத்தை இன்சூரன்ஸ் செய்த தீபிகா படுகோனே + "||" + Deepika Padukone, who insured the wedding, refers to the blast and fire

குண்டு வெடிப்பு, தீவிபத்தை குறிப்பிட்டு திருமணத்தை இன்சூரன்ஸ் செய்த தீபிகா படுகோனே

குண்டு வெடிப்பு, தீவிபத்தை குறிப்பிட்டு திருமணத்தை  இன்சூரன்ஸ் செய்த தீபிகா படுகோனே
தீபிகா படுகோனே-ரன்வீர்சிங் திருமணம் இத்தாலியில் நடந்து முடிந்துள்ளது. அங்குள்ள லோக் கோமா பகுதியில் உள்ள ஓட்டலில் 2 நாட்கள் இந்த திருமண கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.
மும்பையில் இருந்து 100 உறவினர்கள் இதற்காக  சென்று இருந்தார்கள். திருமணம் நடந்த ஓட்டலை சுற்றிலும் பாதுகாப்புக்கு ஆட்களை நிறுத்தி இருந்தார்கள்.

தீபிகா படுகோனே திருமணத்தை படம் பிடிப்பதை தடுக்க செல்போன் கேமராவில் ஸ்டிக்கர் ஒட்டி இருந்தனர். இந்த கெடுபிடியால் திருமண புகைப்படங்கள் வெளியாகவில்லை. அவர்களாக வெளியிட்டால்தான் உண்டு. திருமண படங்களை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்து எரிச்சலை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டனர்.


மத்திய மந்திரி ஸ்மிருதி இரானியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எலும்பு கூடு படத்தை வெளியிட்டு தீபிகா படுகோனே திருமண படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் இந்த நிலைக்கு ஆளாகி விட்டனர் என்று குறிப்பிட்டு கலாய்த்து இருந்தார். அவர் கருத்தை ரசிகர்கள் வரவேற்று நாங்கள் நினைத்ததை நீங்கள் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள் என்று பாராட்டினர்.

இந்த நிலையில் தீபிகா படுகோனேவும், ரன்வீர்சிங்கும் தங்கள் திருமணத்தை டெல்லியில் உள்ள ஒரு இன்சூரன்சு நிறுவனத்தில் பலகோடிக்கு காப்பீடு செய்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. விமான விபத்து, ஓட்டலில் தீவிபத்து, குண்டு வெடிப்பு போன்றவைகளை குறிப்பிட்டு காப்பீடு செய்து உள்ளனர். காப்பீடு தொகை எவ்வளவு என்பது தெரியவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. வைரலாகும் சர்ச்சை வீடியோ: தீபிகா படுகோனே போதை பொருள் பயன்படுத்தினாரா?
இந்தி பட உலகில் முன்னணி இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக இருக்கும் கரண் ஜோகர், மும்பையில் நடிகர்-நடிகைகளுக்கு விருந்து கொடுத்தார்.
2. கிரிக்கெட் படத்தில் சில காட்சிகளில் நடிக்க தீபிகா படுகோனேவுக்கு ரூ.14 கோடி சம்பளம்
ரஜினிகாந்த் ஜோடியாக கோச்சடையான் அனிமேஷன் படத்தில் நடித்துள்ள தீபிகா படுகோனே இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். பத்மாவத் படத்தில் ராணி பத்மினியாக நடித்து சர்ச்சையில் சிக்கினார்.
3. திருமணமான நடிகைகளை ஒதுக்குவதா? -தீபிகா படுகோனே
ரஜினிகாந்த் ஜோடியாக கோச்சடையான் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பிரபலமான தீபிகா படுகோனே இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.