சினிமா செய்திகள்

புதிய படத்தில் விஜய் ஜோடி ராஷ்மிகா? + "||" + Will Vijai pair Rashimika in the new film?

புதிய படத்தில் விஜய் ஜோடி ராஷ்மிகா?

புதிய படத்தில் விஜய் ஜோடி ராஷ்மிகா?
விஜய்யின் 62-வது படமாக சர்கார் திரைக்கு வந்தது. அடுத்து புதிய படத்தில் நடிக்க அவர் தயாராகி உள்ளார். இந்த படத்தை அட்லி இயக்குகிறார்.
விஜய்-அட்லி இவர்கள் கூட்டணியில் தெறி, மெர்சல் படங்கள் ஏற்கனவே வந்தன. இப்போது மூன்றாவது தடவையாக சேர்ந்துள்ளனர். இந்த படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. 

தற்காலிகமாக ‘தளபதி 63’ என்று அழைக்கின்றனர். ஏற்கனவே விஜய் ஜோடியாக நயன்தாரா, காஜல் அகர்வால், சமந்தா, அனுஷ்கா, தமன்னா என்று முன்னணி நடிகைகள் நடித்துள்ளனர். சர்கார் படத்தில் கீர்த்தி சுரேஷ் ஜோடியாக வந்தார். புதிய 63–வது படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கப்போவது யார் என்று எதிர்பார்ப்பு நிலவியது. 

நயன்தாரா, சமந்தா ஆகியோரின் பெயர்கள் அடிபட்டன. இப்போது ராஷ்மிகா மடன்னாவின் பெயரையும் பரிசீலிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய் ரசிகர் ஒருவரும் ராஷ்மிகாதான் விஜய் ஜோடியாக நடிக்கிறார் என்று டுவிட்டரில் பதிவிட்டார். அந்த டுவிட்டரின் கீழே ராஷ்மிகா, ‘‘டேய் எனக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடாதேடா’’ என்று தமாஷாக குறிப்பிட்டு உள்ளார். 

ராஷ்மிகா தெலுங்கில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக கீதா கோவிந்தம் படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது : விஜய், அஜித், சூர்யாவின் புதிய படங்கள்
ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியல் பணிகளுக்கு நடுவில் படங்களிலும் நடிக்கிறார்கள். கமல்ஹாசன் தேவர் மகன், இந்தியன் ஆகிய படங்களின் இரண்டாம் பாகங்களில் நடிக்கிறார்.
2. விஜய்யின் அரசியல் பேச்சை விமர்சித்த கருணாகரனுடன் ரசிகர்கள் மோதல்
நகைச்சுவை நடிகர் கருணாகரனுடன் விஜய் ரசிகர்கள் மோதல் சமூக வலைத்தளத்தை பரபரப்பாக்கி வருகிறது.
3. காதலித்த மாணவி பேசாததால் மிரட்டிய ஆட்டோ டிரைவர் கைது
காதலித்த கல்லூரி மாணவி திடீரென பேசாததால் அவரை மிரட்டிய ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.
4. இறுதிகட்ட படப்பிடிப்பில் விஜய், அஜித், சூர்யா, விக்ரமின் புதிய படங்கள்
விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம் படங்கள் இறுதிகட்ட படப்பிடிப்பில் உள்ளன. அடுத்தடுத்து இவை திரைக்கு வருகின்றன.
5. ‘சர்கார்’ படத்தில் சுந்தர் பிச்சை வேடத்தில் விஜய்?
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்துக்கு ‘சர்கார்’ என்று பெயரிட்டு உள்ளனர்.