சினிமா செய்திகள்

நடிகை அக்‌ஷராஹாசனின் ஆபாச புகைப்படங்கள் வெளியாக காரணம் காதலரா? + "||" + Tanuj Virmani admits receiving Akshara Haasan's leaked pictures from her: But I haven't let them out

நடிகை அக்‌ஷராஹாசனின் ஆபாச புகைப்படங்கள் வெளியாக காரணம் காதலரா?

நடிகை அக்‌ஷராஹாசனின் ஆபாச  புகைப்படங்கள் வெளியாக காரணம் காதலரா?
நடிகை அக்‌ஷராஹாசனின் ஆபாச புகைப்படங்கள் வெளியாக காதலர் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பை

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான அக்‌ஷராஹாசனின் அந்தரங்க புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.

இதுகுறித்து பேசிய நடிகை அக்‌ஷரா, அந்த புகைப்படங்கள் ஒரு குறும்படத்திற்காக எடுக்கப்பட்டவை என்றும் அதனை சில சில்மிஷகாரர்கள் வேண்டுமேன்றே இணையத்தில் வெளியிட்டதாகவும் கூறியிருந்தார். இது தொடர்பாக மும்பை சைபர் கிரைம் போலீசிடம் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நடிகை அக்‌ஷராஹாசனின் முன்னாள் காதலரான தனுஜ் விர்மானி என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

விசாரணையில், தனுஜ் கூறியதாவது, என்னிடம் அக்‌ஷராஹாசனின் அந்தரங்க புகைப்படம் இருந்தது உண்மை தான்.  நாங்கள்  இருவரும் 4 வருடமாக டேட்டிங் செய்து வருகிறோம். ஆனால், அவரை கடந்த 2013-ஆம் ஆண்டு அந்த படங்களை எனக்கு அனுப்பினார். அதனை நான் என் கைப்பேசியிலிருந்து அழித்துவிட்டேன். அக்‌ஷராஹாசனின் அந்தரங்க புகைப்படம் வெளியானதற்கும் தனக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என்று கூறியுள்ளார்.

தனுஜ் விர்மானி நடிகை ரதி அக்னிகோத்தாரியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.