சினிமா செய்திகள்

டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து நீக்கம்; பாடகி சின்மயி டுவிட்டரில் தகவல் + "||" + Removed from Dubbing artists association; Singer Chinmayi reported on Twitter

டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து நீக்கம்; பாடகி சின்மயி டுவிட்டரில் தகவல்

டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து நீக்கம்; பாடகி சின்மயி டுவிட்டரில் தகவல்
டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து தன்னை நீக்கி உள்ளனர் என பாடகி சின்மயி டுவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை,

தமிழ் திரைப்படங்களில் பின்னணி பாடல்களை பாடி வருபவர் பாடகி சின்மயி.  இவர் பல படங்களுக்கு பின்னணி வசனங்களையும் பேசியுள்ளார்.  சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 படத்தில் நடிகை திரிஷாவுக்கு பின்னணி வசனம் பேசினார்.

இவர் மீடூ விவகாரத்தில் கடந்த அக்டோபரில், கவிஞர் வைரமுத்து சில பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக டுவிட்டரில் பதிவிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார்.

இந்த நிலையில், டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் தலைவரான நடிகர் ராதாரவிக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்த 2 பெண்களுக்கு பாடகி சின்மயி ஆதரவாக பேசினார்.  இதனால் தனது டப்பிங் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து தன்னை நீக்கி உள்ளனர் என தெரிவித்து உள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளாக சந்தா தொகை செலுத்தவில்லை என சங்கம் தெரிவித்துள்ளது.  இதுபற்றி எனக்கு எந்த அறிவிப்பும் செய்யவில்லை.

சங்கத்தில் இருந்து தன்னை நீக்கியுள்ள நிலையில், 96 தனது கடைசி படம் ஆக இருக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.