சினிமா செய்திகள்

தொடர் புரளிகளால் மன அழுத்தம்: இலியானா கொந்தளிப்பு + "||" + Depression by continuous rigors: Iliyana turmoil

தொடர் புரளிகளால் மன அழுத்தம்: இலியானா கொந்தளிப்பு

தொடர் புரளிகளால் மன அழுத்தம்: இலியானா கொந்தளிப்பு
‘கேடி’, ‘நண்பன்’ ஆகிய படங்களில் நடித்தவர், இலியானா. இவர் தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
‘அமர் அக்பர் அந்தோணி’ என்ற தெலுங்கு படத்தில் ரவி தேஜா ஜோடியாக  இலியானா நடித்து வருகிறார்.

இந்தநிலையில், இலியானாவுக்கு திருமணம் ஆகிவிட்டது என்றும், தற்போது அவர் கர்ப்பமாக உள்ளார் என்றும், விரைவில் சினிமாவுக்கு முழுக்க போடப்போகிறார் என்றும் ‘கிசுகிசு’க்கள் பரவின. இதனால் நடிகை இலியானா கடும் ஆத்திரம் அடைந்துள்ளார்.


“எனது எதிர்காலத்தை பாழாக்கவே இதுபோன்ற வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்த வதந்திகள் ஆதாரமற்றவை. எதிலும் உண்மை இல்லை. நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்காக நான் காத்திருக்கிறேன். ஒரு பாடலுக்கு ஆட வாய்ப்பு வந்தபோது, அதை மறுத்துவிட்டேன். காரணம் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிக்கவேண்டும் என்பதால்தான்.

எனக்கு திருமணம் ஆகவில்லை, நான் கர்ப்பமாகவும் இல்லை. என்னை அடையாளம் காட்டிய சினிமாவை விட்டு நான் எப்படி போவேன்? 20 வயதில் நடிக்க வந்தேன், இப்போது எனக்கு 32 வயதாகிறது. இதுபோன்ற தொடர் புரளிகள் எனக்கு மன அழுத்தத்தை உண்டாக்குகின்றன. என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து யாரும் கருத்து தெரிவிக்க வேண்டாம்” என்று நடிகை இலியானா கூறியிருக்கிறார்.தொடர்புடைய செய்திகள்

1. ‘மீ டூ’வால் சினிமா துறை சுத்தமாகும் –நடிகை இலியானா
தமிழில் கேடி, நண்பன் படங்களில் நடித்துள்ள இலியானா இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். சினிமாவில் பாலியல் தொல்லைகள் குறித்து அவர் கூறியதாவது:–