சினிமா செய்திகள்

“96 படத்துக்கு பிறகு பொறுப்புகள் அதிகரித்து உள்ளன” - திரிஷா சொல்கிறார் + "||" + "There's a lot of responsibilities after 96 films," says Trisha

“96 படத்துக்கு பிறகு பொறுப்புகள் அதிகரித்து உள்ளன” - திரிஷா சொல்கிறார்

“96 படத்துக்கு பிறகு பொறுப்புகள் அதிகரித்து உள்ளன” - திரிஷா சொல்கிறார்
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான திரிஷா நடித்து சமீபத்தில் வெளியான ‘96’ திரைப்படம், வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
‘96’ படத்தில், விஜய் சேதுபதியுடனான காதல் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. பிற மொழிகளிலும் இந்த படத்தை எடுக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

திரிஷா சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், ‘96’ படம் என் வாழ்வில் மறக்க முடியாத படமாக அமைந்திருக்கிறது. எங்கு போனாலும் என்னை ‘ஜானு’ என்று பாசத்துடன் அழைக்கிறார்கள். இந்த படத்தால் எனக்கு பொறுப்புகள் கூடியிருக்கின்றன. நல்ல படங்களை கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கிறது” என்று கூறியுள்ளார்.


திரிஷா தற்போது ‘கர்ஜனை’, ‘பேட்ட’, ‘1818’, ‘பரமபதம் விளையாட்டு’ உள்ளிட்ட படங்களில், நடித்து கொண்டிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. லைகா நிறுவனம் தயாரிக்கிறது : திரிஷா படத்தின் பெயர், ‘ராங்கி!’
திரிஷா தற்போது ஒரு திகில் படத்தில் நடித்து வருகிறார்.
2. டுவிட்டரில் திரிஷா சாதனை : பின்தொடரும் 50 லட்சம் பேர்
நடிகர்-நடிகைகள் வாழ்க்கையில் டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் முக்கிய அங்கமாகி விட்டன.