சினிமா செய்திகள்

ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ ‘மேக்கிங் வீடியோ’ இணையதளத்தில் வெளியானது + "||" + Rajinikanth's '2.0' 'Making Video' was released on the website

ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ ‘மேக்கிங் வீடியோ’ இணையதளத்தில் வெளியானது

ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ ‘மேக்கிங் வீடியோ’ இணையதளத்தில் வெளியானது
ரஜினிகாந்த் நடித்து, ஷங்கர் இயக்கிய ‘2.0’ படம் 29-ந்தேதி வெளிவர இருக்கிறது. இந்த படத்தில் ரஜினிகாந்துடன் பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய்குமார் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். படத்தின் கதாநாயகி, எமிஜாக்சன்.
‘2.0’ படம் உருவானது எப்படி? என்ற ‘மேக்கிங் வீடியோ’ பல லட்சம் செலவில் தயாராகி இருந்தது. அந்த வீடியோ படம் இணைய தளத்தில் வெளியாகி இருக்கிறது. இது, படக்குழுவினருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது.


‘மேக்கிங் வீடியோ’வை திருட்டுத்தனமாக வெளியிட்டது யார்? அவர் கைக்கு அந்த படம் எப்படி சிக்கியது? என்பது பற்றி பட நிறுவனம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

பாதுகாப்பை மீறி, எல்லா பெரிய பட்ஜெட் படங்களையும் இணையதளத்தில் வெளியிட்டு வரும் தமிழ் ராக்கர்ஸ், ‘2.0’ படத்தையும் பாதுகாப்பை மீறி, இணையதளத்தில் வெளியிடும் முயற்சியில் தீவிரமாக இருப்பதாக பேசப்படுகிறது. அதன் முயற்சியை எப்படி தடுப்பது? என்று பட நிறுவனம் ஆலோசனை நடத்தி வருகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. தெலுங்கு படங்களின் வசூல் பாதிக்குமா?
ரஜினிகாந்துக்கு தெலுங்கு பட உலகில் ஒரு பெரிய `மார்க்கெட்’ இருப்பது அனைவரும் அறிந்த தகவல்.
2. அறிமுக பாடலை பாடுகிறார் : ரஜினியின் ‘தர்பார்’ கதையை சொன்ன எஸ்.பி.பி.
ரஜினிகாந்த் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் தயாராகும் ‘தர்பார்’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது. இதில் நயன்தாரா ஜோடி சேர்ந்துள்ளார்.
3. ரஜினிகாந்த் படத்தில், திருநங்கை!
விஜய் சேதுபதியின் ‘தர்மதுரை’ படத்தில் ஒரு முக்கிய வேடத்தில், திருநங்கை ஜீவா நடித்து இருந்தார்.
4. ‘தர்பார்’ படப்பிடிப்பு 2 வாரத்தில் முடிகிறதா? ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம்
ரஜினிகாந்த் ‘பேட்ட’ படத்துக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார்.
5. வைரலாகும் புகைப்படம் : படப்பிடிப்பில் பேரனுடன் ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் பேட்ட படத்துக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் நடிக்கிறார். ஜோடியாக நயன்தாரா வருகிறார்.