சினிமா செய்திகள்

பிரியங்கா சோப்ராவின் திருமணத்துக்கான அரண்மனை வாடகை ரூ.43 லட்சம் + "||" + Palace rentals for Priyanka Chopra's wedding is Rs 43 lakh

பிரியங்கா சோப்ராவின் திருமணத்துக்கான அரண்மனை வாடகை ரூ.43 லட்சம்

பிரியங்கா சோப்ராவின் திருமணத்துக்கான அரண்மனை வாடகை ரூ.43 லட்சம்
தமிழில் விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் நடித்த பிரியங்கா சோப்ரா இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.
ஹாலிவுட் படங்களிலும் நடிக்கிறார். தன்னை விட 10 வயது குறைந்தவரான அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாஸ் மீது பிரியங்கா சோப்ராவுக்கு காதல் மலர்ந்து திருமணத்துக்கு தயாராகி உள்ளனர்.

இவர்கள் திருமணம் அடுத்த மாதம் (டிசம்பர்) 1-ந்தேதி ஜோத்பூர் அரண்மனையில் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரியங்கா சோப்ராவும் நிக் ஜோனாசும் கடந்த மாதம் ஜோத்பூர் சென்று திருமணம் செய்து கொள்ள இருக்கும் உமைத் பவன் அரண்மனையை பார்வையிட்டனர்.


இந்த அரண்மனையின் ஒரு நாள் வாடகை ரூ.43 லட்சம் என்று கூறப்படுகிறது. அரண்மனையில் 347 அறைகளும் உள்ளன. திருமண விழாவை 4 நாட்கள் கோலாகலமாக கொண்டாடுகிறார்கள். நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பிரியங்காவுக்கு நிக் ஜோனாஸ் ரூ.2 கோடிக்கு மோதிரம் அணிவித்தார். திருமணத்துக்கும் நகைகளால் அவரை அலங்கரிப்பார் என்கின்றனர்.

அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த விருந்து நிகழ்ச்சியொன்றில் பிரியங்கா சோப்ரா ரூ.9.5 கோடிக்கு நகைகள் அணிந்து இருந்தார். திருமண புகைப்படங்களை வெளியிடும் உரிமையை இருவரும் ரூ.18 கோடிக்கு விற்று இருக்கிறார்கள். திருமணத்துக்கு பிறகு அமெரிக்காவில் பிரபலங்கள் வசிக்கும் பெவர்லி ஹில்ஸ் பகுதியில் குடியேறுகிறார்கள். இதற்காக அங்கு ஆடம்பரமான வீடு ஒன்றை விலைக்கு வாங்கி உள்ளனர்.