சினிமா செய்திகள்

கஜா புயல் பாதிப்பு: நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் சார்பில் ரூ.50 லட்சம் நிவாரண உதவி + "||" + On behalf of ActorSivakumar family SriSivakumar Suriya_offl Karthi_Offl Jyotika 2D_ENTPVTLTD donating a sum of Rs. 50 Lakhs

கஜா புயல் பாதிப்பு: நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் சார்பில் ரூ.50 லட்சம் நிவாரண உதவி

கஜா புயல் பாதிப்பு:  நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் சார்பில் ரூ.50 லட்சம் நிவாரண உதவி
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் சார்பில் ரூ.50 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.#GajaCyclone
சென்னை

’கஜா’ புயல் தாக்கியதில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது.

சுழன்று அடித்த புயலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 1 லட்சத்து 70 ஆயிரம் மரங்களும்,1 லட்சத்து 17 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்து இருக் கின்றன. .புயலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், சாதாரண காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். இதேபோல் உயிர் இழந்த மாடுகளுக்கு தலா ரூ.30 ஆயிரமும், ஆடுகளுக்கு ரூ.3 ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவித்து இருக்கிறார்.

புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.புயல் சேதத்தை மதிப்பிடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன

தி.மு.க அறக்கட்டளை சார்பில் ரூ.1. கோடி நிவாரன உதவி அறிவிக்கப்பட்டு உள்து. 

கஜா' புயலால் கடுமையாகப் பாதிக்கப்படட் டெல்டா மாவட்டங்களுக்கு உதவ திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் சார்பில் ரூ.50 லட்சம் வழங்கப்படும் என அறிவிப்பு 

நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவிகளை வழங்கவுள்ளனர். 


தொடர்புடைய செய்திகள்

1. கர்ப்பம் குறித்த வதந்தி ; நீங்கள் முட்டாள் ஆகிவிடுவீர்கள் - அனுஷ்கா சர்மா கோபம்
கர்ப்பம் குறித்த வதந்திக்கு நடிகை அனுஷ்கா சர்மா கோபமாக பதில் அளித்து உள்ளார்.
2. பிரபல நடிகை படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கினார்?
பிரபல மலையாள நடிகை படப்பிடிப்பின் போது விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
3. நடிகர் ரஜினிகாந்தின் 2.O திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.500 கோடி வசூல்
ரஜினிகாந்த் நடித்து ஷங்கர் இயக்கியுள்ள 2.0 படத்தின் வசூல் உலகம் முழுவதும் 500 கோடி ரூபாயை எட்டியுள்ளது. #2Point0
4. இந்தியன்-2 படம்தான் எனது திரை உலக பயணத்தில் கடைசி படமாக இருக்கும் - கமல்ஹாசன்
இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறேன். இந்த படம்தான் எனது திரை உலக பயணத்தில் கடைசி படமாக இருக்கும் என கமல்ஹாசன் கூறி உள்ளார்.
5. பிரதமர் மோடி நாட்டுக்கு நல்லது செய்ய நினைக்கிறார் , கமல் எனது நண்பர்- ரஜினிகாந்த் பேட்டி
பிரதமர் மோடி நாட்டுக்கு நல்லது செய்ய நினைக்கிறார் என்றும், கமல்ஹாசன் எனது நண்பர் அவரை அரசியல் போட்டியாக கருதவில்லை என்றும் ரஜினிகாந்த் கூறி உள்ளார்.