சினிமா செய்திகள்

‘அயோக்யா’ பட ‘போஸ்டர்’ பீர் பாட்டிலுடன் விஷால்: ராமதாஸ் எதிர்ப்பு + "||" + 'Ayokya' film 'Poster' with beer bottle Vishal: Ramadoss protest

‘அயோக்யா’ பட ‘போஸ்டர்’ பீர் பாட்டிலுடன் விஷால்: ராமதாஸ் எதிர்ப்பு

‘அயோக்யா’ பட ‘போஸ்டர்’ பீர் பாட்டிலுடன் விஷால்: ராமதாஸ் எதிர்ப்பு
அயோக்யா பட போஸ்டரில் பீர் பாட்டிலுடன் தோன்றிய நடிகர் விஷாலுக்கு, ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

விஷால் ‘சண்டகோழி-2’ படத்துக்கு பிறகு ‘அயோக்கியா’ என்ற படத்தில் நடிக்கிறார். இதில் கதாநாயகியாக ராஷி கண்ணா வருகிறார். வெங்கட் மோகன் இயக்குகிறார். இவர் ஏ.ஆர்.முருகதாசிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த படத்தில் சன்னிலியோன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவதாகவும் கூறப்பட்டது. இதில் விஷால் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். படத்தில் வரும் அவரது முதல் தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். அதில் விஷால் பீர் பாட்டிலை கையில் வைத்துக் கொண்டு போலீஸ் ஜீப்பில் உட்கார்ந்து இருப்பது போல் காட்சி உள்ளது.

இந்த படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. சுவரொட்டியாகவும் ஒட்டி உள்ளனர். இந்த படம் சர்ச்சையாகி உள்ளது. இதனை பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:-

“அயோக்யா திரைப்பட விளம்பரத்தில் கதாநாயகர் விஷால் பீர் புட்டியுடன் தோன்றுகிறார். நடிகர் சங்க பொதுச்செயலாளர் என்ற முறையில் புகைக்கும் காட்சிகளில் நடிகர்கள் நடிப்பதை தடை செய்ய வேண்டும் என கடிதம் எழுதினேன். இப்போது புகையை தாண்டி பீர் பாட்டிலுடன் நடிக்கிறார். என்னவொரு சமூக பொறுப்பு.

பிர் பாட்டிலுடன் விஷால் தோன்றும் விளம்பரமும் முதல் சுவரொட்டியும் உடனடியாக திரும்ப பெற வேண்டும். இந்த விளம்பரம் மூலம் அவரது ரசிகர்களுக்கு நடிகர் விஷால் சொல்ல வரும் செய்தி என்ன? நடிகர் சங்க பொதுச்செயலாளரிடம் இருந்து சமூக அக்கறையை எதிர்பார்க்கிறேன்.”

இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.