சினிமா செய்திகள்

மீண்டும் காதல்? ஜோடியாக சுற்றும் ஓவியா-ஆரவ் + "||" + Love again? Oviya-Arrow Rounding Pair

மீண்டும் காதல்? ஜோடியாக சுற்றும் ஓவியா-ஆரவ்

மீண்டும் காதல்? ஜோடியாக சுற்றும் ஓவியா-ஆரவ்
ஓவியாவும், ஆரவ்வும் மீண்டும் நெருக்கமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழில் ‘களவானி’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி கமல்ஹாசனின் மன்மதன் அம்பு படத்தில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தவர் ஓவியா. மெரினா, கலகலப்பு, மூடர் கூடம், மத யானை கூட்டம், யாமிருக்க பயமேன் ஆகியவை அவரது நடிப்பில் வந்த முக்கிய படங்கள்.

டி.வி.யில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலமாகி சமூக வலைத்தளத்தில் ஓவியாஆர்மி என்று தொடங்கும் அளவுக்கு ரசிகர்கள் சேர்ந்தனர். அப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் சக போட்டியாளர் ஆரவ் மீது ஓவியாவுக்கு காதல் ஏற்பட்டது. ஆரவ், ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார்.

இருவரும் பிக்பாஸ் அரங்கில் முத்தமிட்டு காதலை வெளிப்படுத்தினர். ஆனால் ஆரவ் திடீரென்று ஓவியாவுடன் காதல் இல்லை என்று மறுத்தார். இதனால் மனம் உடைந்து பிக்பாஸ் அரங்கின் நீச்சல் குளத்தில் குதித்து ஓவியா தற்கொலைக்கு முயன்றதாகவும் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தியதாகவும் கூறப்பட்டது.

ஆனால் தற்போது ஓவியாவும் ஆரவ்வும் மீண்டும் நெருக்கமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் ஆரவ் பிறந்த நாள் நிகழ்ச்சியில் இருவரும் ஜோடியாக எடுத்துக்கொண்ட படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். இப்போது மீண்டும் கடற்கரையில் ஜோடியாக நின்று செல்பி எடுத்து வெளியிட்டு இருக்கிறார்கள். இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.தொடர்புடைய செய்திகள்

1. காதலி கர்ப்பமான விவகாரம் மனைவிக்கு தெரிந்ததால் புகைப்படக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை போலீஸ் விசாரணை
காதலி கர்ப்பமான விவகாரம் மனைவிக்கு தெரிந்ததால் புகைப்படக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
2. பிரதமர் மோடி மீண்டும் மக்களை முட்டாளாக்க காங்கிரஸ் அனுமதிக்காது - காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல் காந்தி பேச்சு
பிரதமர் மோடி மீண்டும் மக்களை முட்டாளாக்க காங்கிரஸ் அனுமதிக்காது என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
3. ‘தாயாரை அவதூறாக பேசியதால் அடித்து கொன்றேன்’ பேராசிரியர் மனைவி கொலை வழக்கில் கள்ளக்காதலன் கைது
பேராசிரியர் மனைவி கொலை வழக்கில் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்.
4. ``ரசிகர்கள்தான் என் நண்பர்கள்!''
ஓவியாவுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்து வருகிறார்கள். ரசிகர்களை கண்டால் இவர் பயந்து ஓடுவதில்லை. அவர்களுடன் தாராளமாக கைகுலுக்குகிறார்.
5. ஈரோட்டில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
ஈரோட்டில், காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.