சினிமா செய்திகள்

நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் எப்போது? - ரசிகர்கள் எதிர்பார்ப்பு + "||" + When is Nayantara-Vignesh Shivn married? - Fans expectation

நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் எப்போது? - ரசிகர்கள் எதிர்பார்ப்பு

நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் எப்போது? - ரசிகர்கள் எதிர்பார்ப்பு
நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஆகியோரது திருமணம் எப்போது, என ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ஜோடியாகவும் நெருக்கமாகவும் இருக்கும் படங்களை அடிக்கடி சமூக வலைத்தளத்தில் வெளியிடுகின்றனர். நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் தொடங்கிய இவர்கள் காதல் பல ஆண்டுகளாக தொடர்ந்தாலும் இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.


நயன்தாராவுக்கு இது மூன்றாவது காதல். ஏற்கனவே சிம்பு, பிரபுதேவா ஆகியோருடன் மலர்ந்த காதல் முறிந்து போனது. எனவே இந்த காதலாவது நிலைக்க வேண்டும் என்பது அவரது ரசிகர்களின் கவலை. சமீபத்தில் இருவரும் வெளிநாடுகளில் ஜோடியாக சுற்றி விட்டு வந்தனர். அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டார்கள்.

அந்த படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டனர். இந்த வருடத்தில் அவர்கள் திருமணம் நடக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருடம் முடியபோகும் நிலையிலும் இன்னும் அதற்கான ஏற்பாடுகள் நடக்காததால் ஆதங்கத்தை வெளியிட்டு வருகிறார்கள். சில தினங்களுக்கு முன்பு நயன்தாராவுக்கு 34 வயது பிறந்தது. திரையுலக பிரபலங்கள் வாழ்த்தினர்.

நயன்தாராவுக்காக விக்னேஷ் சிவன் வீட்டை அலங்கரித்து கேக் வெட்ட வைத்தார். அந்த படத்தையும் வீடியோவையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். இதை பார்த்த ரசிகர்கள் “விரைவில் திருமணம் செய்து கொள்ளுங்கள்” என்று சமூக வலைத்தளத்தில் வற்புறுத்தி வருகிறார்கள். நயன்தாரா வாழ்க்கையில் நிறைய கஷ்டம் அனுபவித்து விட்டார். அவரை கைவிட்டு விடாதீர்கள். விரைவில் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று விக்னேஷ் சிவனுக்கும் சமூக வலைத்தளத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அடுத்த வருடம் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்

1. சர்ச்சையில் பிரியங்கா சோப்ரா திருமணம்
பிரியங்கா சோப்ராவின் திருமணம் சர்ச்சையில் சிக்கி உள்ளது.
2. காதல் திருமணம் செய்த காடுவெட்டி குரு மகள், பாதுகாப்பு கேட்டு மணக்கோலத்தில் போலீசில் தஞ்சம்
காதல் திருமணம் செய்த காடுவெட்டி குரு மகள், பாதுகாப்பு கேட்டு மணக்கோலத்தில் கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.
3. நயன்தாரா சம்பளம் ரூ.6 கோடியாக உயர்ந்தது!
தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகிகளில் முதன்மை நாயகியான நயன்தாரா, படத்துக்கு படம் தனது சம்பளத்தை உயர்த்திக் கொண்டே போகிறார்.
4. நடிகை சுஜா வாருணி திருமணம்: சிவாஜி பேரனை மணந்தார்
நடிகை சுஜா வாருணியின் திருமணம் சென்னையில் நடைபெற்றது. அவர் சிவாஜியின் பேரனை மணந்தார்.
5. சிரஞ்சீவி படத்தில் ராணி வேடத்தில் நயன்தாரா
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார் நயன்தாரா. கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களிலும் நடிக்கிறார். இப்போது 7 படங்கள் அவர் கைவசம் உள்ளன.