சினிமா செய்திகள்

பேஷனாக்கி விட்டனர் - ‘மீ டூ’வை சாடிய மோகன்லால் + "||" + Have become a Fashion - 'Me too' Condemnation Mohanlal

பேஷனாக்கி விட்டனர் - ‘மீ டூ’வை சாடிய மோகன்லால்

பேஷனாக்கி விட்டனர் - ‘மீ டூ’வை சாடிய மோகன்லால்
மீ டூ மூலம் குற்றம் சுமத்துவது தற்போது பேஷனாகி விட்டதாக, நடிகர் மோகன்லால் தெரிவித்துள்ளார்.
‘மீ டூ’ இயக்கம் இந்திய திரையுலகை உலுக்கி வருகிறது. நடிகர் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் சொல்லி இந்தி பட உலகை அதிர வைத்தார். தொடர்ந்து நடிகர்கள், இயக்குனர்களின் தலைகள் மீ டூ வில் உருண்டன.


பாடகி சின்மயி மூலம் தமிழ் பட உலகையும் அது தாக்கியது. படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுக்காதவர்களை பழிவாங்க மீ டூவை தவறாக பயன்படுத்துவதாக விமர்சனங்களும் கிளம்பின. இந்த நிலையில் மலையாள நடிகர் மோகன்லாலும் மீ டூவை சாடி உள்ளார்.

துபாயில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட அவர் இதுகுறித்து கூறியதாவது:-

“மீ டூ என்பது ஒரு பேஷனாகி விட்டது. அது வந்த வேகத்திலேயே விரைவில் மறைந்து விடும். மலையாள பட உலகில் நடிகைகளுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

மீ டூ ஒரு இயக்கம் என்கின்றனர். என்னை பொறுத்தவரை அதை இயக்கமாக பார்க்க கூடாது. ‘மீ டு’வின் ஆயுட் காலம் மிகவும் குறைவுதான். பாலியல் தொல்லைகள் திரையுலகில் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் இருக்கிறது.” என்று மோகன்லால் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. பாலியல் வழக்கில் பாலிவுட் நடிகருக்கு ஜாமீன் ”சொந்த நன்மைக்காக நடிகர் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது”
பாலியல் வழக்கில் பாலிவுட் நடிகருக்கு ஜாமீன் விண்டா நந்தா தனது சொந்த நன்மைக்காக நடிகர் மீது குற்றம் சாட்டினார் என நீதிமன்றம் கூறி உள்ளது.
2. ‘மீ டூ’ வை விமர்சித்த ராணிமுகர்ஜிக்கு எதிர்ப்பு
மீ டூ வை விமர்சித்த நடிகை ராணிமுகர்ஜிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
3. மீ டூ இயக்கத்தால் சுமார் 80 சதவீத ஆண்களிடம் மாற்றம் ஏற்பட்டுள்ளது- சர்வே
மீ டூ இயக்கத்தால் சுமார் 80 சதவீத ஆண்களிடம் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று தனியார் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
4. “மீ டூவை தவறாக பயன்படுத்துகின்றனர்” - நடிகை பிரியாமணி
‘மீ டூ’ இயக்கம் பட உலகை உலுக்கியது. நடிகைகளும் பெண் இயக்குனர்களும் பாலியல் கொடுமைகளை இதில் பதிவிட்டு பரபரப்பு ஏற்படுத்தினர்.
5. மீ டூ வை ‘பேஷன்’ என்பதா? - மோகன்லாலை கண்டித்த ரேவதி
மீ டூ வை பேஷன் என்று கூறிய நடிகர் மோகன்லாலை, நடிகை ரேவதி கண்டித்துள்ளார்.