சினிமா செய்திகள்

75-வது வயதில் மனைவியை விவாகரத்து செய்யும் ஹாலிவுட் நடிகர் + "||" + At the age of 75, Hollywood actor who divorces his wife

75-வது வயதில் மனைவியை விவாகரத்து செய்யும் ஹாலிவுட் நடிகர்

75-வது வயதில் மனைவியை விவாகரத்து செய்யும் ஹாலிவுட் நடிகர்
75-வது வயதில், தனது மனைவியை ஹாலிவுட் நடிகர் விவாகரத்து செய்ய உள்ளார்.

உலகம் முழுவதும் புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டி நீரோ. இவர், காட் பாதர், ஸ்கார்பேஸ், ஒன்ஸ் அபான் அ டைம் இன் அமெரிக்கா, ஏஞ்சல்ஸ் ஹார்ட், விஸார்ட் ஆப் லைஸ் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். அனைத்து படங்களுமே உலகம் முழுவதும் வசூலை வாரி குவித்தன.

இவர் டயானே அபோட் என்பவரை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். அதன்பிறகு டயானேவை ராபர்ட் டி நீரோ விவாகரத்து செய்தார். பின்னர் டூகீ ஸ்மித் எனவருடன் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்தார். இவர்களுக்கு 42 வயதில் ஜூலியன்-ஆரோன் என்ற இரட்டை மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் லண்டனில் ஒரு உணவகத்தில் பணியாற்றிய கிரேஸ் ஹைடவர் என்பவரை சந்தித்து காதல் வயப்பட்டார். இருவரும் 10 ஆண்டுகள் காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டனர். இது ராபர்ட் டி நீரோவுக்கு 3-வது திருமணம் ஆகும். இவர்களுக்கு எல்லியட் என்ற மகனும் ஹெலன் கிரேஸ் என்ற மகளும் உள்ளனர்.

தற்போது நீரோவுக்கு 75 வயது. கிரேஸுக்கு 63 வயது. இப்போது கிரேஸையும் விவாகரத்து செய்ய இருக்கிறார். கடந்த சில மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள்.தொடர்புடைய செய்திகள்

1. கடன் பிரச்சினை காரணமாக விடுதியில் கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை
கடன் பிரச்சினை காரணமாக தனியார் விடுதியில் கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2. இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் மனைவி உடல் நல குறைவால் காலமானார்
இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் மனைவி உடல் நல குறைவால் இன்று அதிகாலை காலமானார்.
3. தொழிலாளி கொலை: மனைவியின் கள்ளக்காதலன் உள்பட 5 பேர் கைது
ராணிப்பேட்டை அருகே தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் மனைவியின் கள்ளக்காதலன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
4. பழம்பெரும் திரைப்பட நடிகர் ராஜ் கபூரின் மனைவி மாரடைப்பினால் மரணம்
பழம்பெரும் இந்தி நடிகர் ராஜ் கபூரின் மனைவி மாரடைப்பினால் இன்று மரணம் அடைந்து உள்ளார்.
5. திருமுல்லைவாயலில் போலீஸ்காரரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
திருமுல்லைவாயலில் போலீஸ்காரரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.