சினிமா செய்திகள்

புயலால் பாதித்தவர்களுக்கு கஸ்தூரி ரூ.12 லட்சம் நிவாரண பொருட்கள் + "||" + Kasturi Rs 12 lakh relief supplies for storm victims

புயலால் பாதித்தவர்களுக்கு கஸ்தூரி ரூ.12 லட்சம் நிவாரண பொருட்கள்

புயலால் பாதித்தவர்களுக்கு கஸ்தூரி ரூ.12 லட்சம் நிவாரண பொருட்கள்
புயலால் பாதித்தவர்களுக்கு நடிகை கஸ்தூரி ரூ.12 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தார்.

கஜா புயல் தாக்கியதில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் சேதம் ஏற்பட்டு உள்ளது. நடிகை கஸ்தூரி பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கி உள்ளார். இதற்கான நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. இதில் கஸ்தூரி நிவாரண பொருட்களை லாரியில் ஏற்றி அனுப்பி வைத்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

“நிறைய பேர் கோடிக் கணக்கில் உதவி உள்ளனர். நான் கொஞ்ச நாளாக சம்பாதிக்காமல் இருந்தேன். என்னிடம் பணம் இல்லாவிட்டாலும் மனம் இருக்கிறது. பன்னிரெண்டு லட்சம் ரூபாய்க்கு நிவாரணம் அனுப்பி இருக்கிறோம். அங்கு உடனடித்தேவை தண்ணீர் தான். சாதாரண தண்ணீரை குடி நீராக ஆக்கக் கூடிய கருவிகளை அனுப்பி வைக்கிறோம்.

1000 போர்வைகள் மற்றும் கொசு மருந்து உள்ளிட்டவைகளை அனுப்புகிறோம். நானும் அங்கு செல்கிறேன். நம்முடைய சகோதரர்கள் அங்கு இருக்கிறார்கள். ரஜினி அனுப்பிய பொருட்களை கூட நமது தம்பிகள் தான் நிர்வகிக்கிறார்கள். முந்தைய பேரிடர்களை விட இந்த முறை அரசின் அணுகுமுறை நன்றாக உள்ளது. முதல்-அமைச்சர் தரை மார்க்கமாக வந்து பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். அங்கு ராணுவ உதவி அவசியத் தேவை. மத்திய அரசு இன்னும் வேகமாக செயல்பட வேண்டும்”.

இவ்வாறு கஸ்தூரி கூறினார்.