நடிகர் ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தின் தமிழ் பாடல் வீடியோ இணையதளத்தில் வெளியீடு


நடிகர் ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தின் தமிழ் பாடல் வீடியோ இணையதளத்தில் வெளியீடு
x
தினத்தந்தி 24 Nov 2018 4:16 PM GMT (Updated: 24 Nov 2018 4:16 PM GMT)

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்தின் தமிழ் பாடல் வீடியோ இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் நடித்து, ஷங்கர் இயக்கிய 2.0 படம் வருகிற 29ந்தேதி திரையில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் ரஜினிகாந்துடன் பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய்குமார் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். படத்தின் கதாநாயகி, எமிஜாக்சன்.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் திரைக்கு வருகிறது. மேலும் பல மொழிகளில் ‘டப்பிங்’ செய்தும் வெளியிடுகின்றனர். இந்த படம் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் 10 ஆயிரம் தியேட்டர்களில் திரையிடப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது தமிழ் திரையுலக வரலாற்றில் புதிய சாதனை என்கின்றனர். இதற்கு முன்பு எந்த தமிழ் படமும் இவ்வளவு தியேட்டர்களில் வெளியானது இல்லை. ஏற்கனவே 1991ல் வெளியான ரஜினியின் தளபதி படம் வெளிநாடுகளில் முதல் தடவையாக 100 தியேட்டர்களில் வந்தது. 2007ல் வெளியான சிவாஜி படம் 1000 தியேட்டர்களில் வெளியானது சாதனையாக பேசப்பட்டது.

இந்த நிலையில், 2.0 திரைப்படத்தின் இந்திர லோகத்து சுந்தரி என்ற தமிழ் வீடியோ பாடல் இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

Next Story