சினிமா செய்திகள்

கோவாவில் இருந்து சென்னை திரும்பினார் அஜித், புதிய படத்துக்காக தயாராகிறார் + "||" + Ajith has returned from Goa and is preparing for a new film

கோவாவில் இருந்து சென்னை திரும்பினார் அஜித், புதிய படத்துக்காக தயாராகிறார்

கோவாவில் இருந்து சென்னை திரும்பினார் அஜித், புதிய படத்துக்காக தயாராகிறார்
கோவாவில் இருந்து சென்னை திரும்பிய அஜித், புதிய படத்துக்காக தயாராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கோவாவில் இருந்து சென்னை திரும்பியபோது எடுக்கப்பட்ட அஜித் மற்றும் அவரது குடும்பத்தினரின் வீடியோ வைரலாக பரவி வருகிறது. பொதுவாகவே திரையுலகை சேர்ந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பற்றி தெரிந்துகொள்வதில் ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகம். ஆனால் தங்களது புகழ் வெளிச்சம், குடும்பத்தார் மீது குறிப்பாக குழந்தைகள் மீது படர்வதை பல முன்னணி பிரபலங்கள் விரும்புவதில்லை. கேமராக் கண்களுக்கு சிக்காமல், குழந்தைகளை மறைத்தே வளர்க்கிறார்கள். ஆனால், செல்போன் உதவியால் எப்போதும் கேமராவுடன் அனைவரும் வளைய வரும் இந்நாட்களில், இது சாத்தியப்படுவதில்லை. பொது இடங்களில் இத்தகைய பிரபலங்களைப் பார்க்கும்போது, உடனடியாக அவர்களை தங்களது கேமராவிற்குள் பிடித்துவிட ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அதேபோல், அவர்களுடன் ‘செல்பி’ எடுத்துக் கொள்ளவும் ஆசைப்படுகிறார்கள்.

பொது இடங்களில், அதிக விளம்பரத்தை விரும்பாதவர், நடிகர் அஜித். அவருடைய தனிப்பட்ட மற்றும் குடும்ப புகைப்படங்களை ரசிகர்கள் அவ்வப்போது சமூகவலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். அஜித் படத்தைப் போலவே அவரது இத்தகைய புகைப்படங்களும் நீண்ட இடைவெளிக்குப் பிறகே வெளியாவதால், அவற்றை வைரலாக்கி விடுகின்றனர், அவரது ரசிகர்கள்.

கடந்த சில தினங்களுக்கு முன், ‘விஸ்வாசம்’ பட வேலைகள் முடிந்து ஓய்வுக்காக அஜித் தனது குடும்பத்துடன் கோவா சென்றார். அப்போது விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலானது.

இந்நிலையில் தற்போது ஓய்வு முடிந்து அவர் சென்னை திரும்பியுள்ளார். விமான நிலையத்தில் அவரை குடும்பத்துடன் பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். உற்சாக வரவேற்பு கொடுத்தார்கள். சிலர், அஜித்துடன் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்துள்ளனர். அவை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதைப்பார்த்து அஜித்தின் குழந்தைகள் மிகவும் பெரியவர்களாக வளர்ந்து விட்டனர் என்று அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

அஜித் அடுத்து ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை வினோத் டைரக்டு செய்கிறார். புதிய படத்துக்காக அஜித் தயாராகி வருகிறார்.தொடர்புடைய செய்திகள்

1. கோவா: காங்கிரசிலிருந்து பாஜக-வுக்குத் தாவிய எம்.எல்.ஏ-க்களுக்கு அமைச்சர் பதவி
கோவாவில் காங்கிரசிலிருந்து பாஜகவுக்குத் தாவிய எம்.எல்.ஏ-க்கள் 3 பேர் இன்று அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.
2. கோவா விமானநிலைய ஓடுபாதையில் தீ
கோவா விமானநிலைய ஓடுபாதையில் திடிரென தீ விபத்து ஏற்பட்டது.
3. கோவாவில் மேயர் மீது மானபங்க வழக்கு பதிவு
கோவாவில் மேயர் மீது மானபங்க வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
4. கோவா துணை முதல்-மந்திரி நீக்கம்: மாநில அரசியலில் பரபரப்பு
கோவாவில் துணை முதல்-மந்திரி பதவி நீக்கம் செய்யப்பட்டது மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
5. கோவா சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் பிரமோத் சவாந்த் வெற்றி
கோவா சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் பிரமோத் சவாந்த் வெற்றி பெற்றார்.