சினிமா செய்திகள்

அஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு + "||" + Ajith starring Viswasam Motion Poster release

அஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு

அஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு
சிறுத்தை சிவா இயக்கத்தில், அஜித் - நயன்தாரா நடிக்கும் விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. #AjithViswasam
சென்னை,

அஜித்- நயன்தாரா நடிக்கும் விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் தூக்கு துரையாக அஜித் நடிக்கிறார்.
மேலும் மோஷன் போஸ்டரில்,  `தூக்குதொரண்ணா கட்டுக்கடங்காத கிராமத்து காட்டு அடி’ என்ற அதிரடி வசனமும் இடம் பெற்றுள்ளது.


 அஜித் - சிவா கூட்டணியில் உருவாகிவரும் படம் ’விஸ்வாசம்’. வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் நான்காவது படம் இது. சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் நயந்தாரா, விவேக், யோகி பாபு, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஏற்கெனவே ’அஜித்-ன் ‘பில்லா’ மற்றும் ’ஆரம்பம்’ படங்களில் நடித்த நயன்தாரா மீண்டும் இணைந்து நடித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.  

மோஷன் போஸ்டரில், விஸ்வாசம் படம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. எவ்வித முன்னறிவிப்புமின்றி மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர்.