‘மீ டூ’வை விமர்சிப்பதா? - மோகன்லாலுக்கு பிரகாஷ்ராஜ் எதிர்ப்பு


‘மீ டூ’வை விமர்சிப்பதா? - மோகன்லாலுக்கு பிரகாஷ்ராஜ் எதிர்ப்பு
x
தினத்தந்தி 25 Nov 2018 11:00 PM GMT (Updated: 25 Nov 2018 9:35 PM GMT)

மீ டூ வை விமர்சித்த மோகன்லாலுக்கு, நடிகர் பிரகாஷ்ராஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


‘மீ டூ’ இயக்கம் திரையுலகை உலுக்கி வருகிறது. இந்தி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பாலியல் புகாரில் சிக்கி உள்ளனர். மீ டூ வுக்கு எதிர்ப்புகளும் கிளம்பி உள்ளன. படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுக்காதவர்களை பழிவாங்க தவறாக இதை பயன்படுத்துவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

மலையாள நடிகர் மோகன்லாலும் மீ டூவை சாடினார். அவர் கூறும்போது, “மீ டூ பேஷனாகி விட்டது. அது வந்த வேகத்திலேயே மறைந்து விடும். மீ டூவை ஒரு இயக்கமாக பார்க்க கூடாது. ‘மீ டு’வின் ஆயுட் காலம் மிகவும் குறைவுதான்” என்றார். மோகன்லால் கருத்துக்கு நடிகை ரேவதி எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்த நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜிடம், மோகன்லால் கூறியது பற்றி கருத்து கேட்டபோது அவர் கூறியதாவது:-

“மீ டூ குறித்து மோகன்லால் கவனமாக பேச வேண்டும். மீ டூ என்பது பெண்களின் வலுவான அதிகாரமாக மாறி இருக்கிறது. பாலியல் தொல்லைகளால் பெண்கள் காயப்படுகின்றனர். வேதனைகளை அனுபவிக்கிறார்கள். பெண்கள் பாலியல் தொல்லையில் சிக்கி பாதிக்கப்படும்போது அமைதியாக இருந்தால் நாம் குற்றவாளிகளுக்கு ஆதரவு அளிப்பதுபோல் ஆகிவிடும்.

மீ டூவின் ஆழத்தையும் அதன் நோக்கத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். மோகன்லால். சிறந்த நடிகர் அறிவுபூர்வமானவர். மீ டு பற்றி யோசிக்காமல் அவர் பேசி இருக்கிறார்.” இவ்வாறு பிரகாஷ்ராஜ் கூறினார்.



Next Story