சினிமா செய்திகள்

3-வது முறையாக இணைந்து நடிக்கிறார்கள் விஜய்யின் 63-வது படத்தில் ஜோடி, நயன்தாரா + "||" + 3rd time Acting together In the 63rd film of Vijay Pair, Nayantara

3-வது முறையாக இணைந்து நடிக்கிறார்கள் விஜய்யின் 63-வது படத்தில் ஜோடி, நயன்தாரா

3-வது முறையாக இணைந்து நடிக்கிறார்கள் விஜய்யின் 63-வது படத்தில் ஜோடி, நயன்தாரா
‘சர்கார்’ படத்தை அடுத்து விஜய் புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் சார்பில் கல்பாத்தி அகோரம் தயாரிக்கிறார். அட்லீ டைரக்டு செய்கிறார்.
‘தெறி,’ ‘மெர்சல்’ ஆகிய 2 படங்களில் விஜய்யும், அட்லீயும் ஏற்கனவே இணைந்து பணிபுரிந்து இருக்கிறார்கள். 2 படங்களும் வெற்றி பெற்றதை அடுத்து விஜய், அட்லீ இருவரும் மூன்றாவது முறையாக, புதிய படத்தில் மீண்டும் இணைகிறார்கள்.


விஜய் நடிக்கும் 63-வது படம், இது. படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். விஜய் நடித்த ‘சிவகாசி’ படத்தில், ஒரே ஒரு பாடலுக்கு நயன்தாரா நடனம் ஆடினார். அடுத்து, ‘வில்லு’ படத்தில் இருவரும் ஜோடியாக நடித்தார்கள். இரண்டு பேரும் 3-வது முறையாக புதிய படத்தில் இணைகிறார்கள். வழக்கமாக விஜய் நடித்த படங்களில், 2 அல்லது 3 கதாநாயகிகள் இருப்பார்கள். அதன்படி, அவருடைய 63-வது படத்திலும் 2 அல்லது 3 கதாநாயகிகள் நடிப்பார்கள் என்று பேசப்படுகிறது.

இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். பாடல்களை விவேக் எழுதுகிறார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.

ஒரு விளையாட்டை கருவாக கொண்ட படம் இது என்றும், இதில் பயிற்சியாளராக விஜய் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. படப்பிடிப்பு வருகிற ஜனவரி மாதம் சென்னையில் தொடங்கி, தொடர்ந்து நடைபெற இருக்கிறது.