சினிமா செய்திகள்

எஸ்.ஜே.சூர்யா நடிப்பில், ‘மான்ஸ்டர்’ + "||" + In SJ Surya acting, Monster

எஸ்.ஜே.சூர்யா நடிப்பில், ‘மான்ஸ்டர்’

எஸ்.ஜே.சூர்யா நடிப்பில், ‘மான்ஸ்டர்’
‘மான்ஸ்டர்’ என்ற படத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார்.
‘மாயா,’ ‘மாநகரம்’ ஆகிய படங்களை தயாரித்த பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் அடுத்து, ‘மான்ஸ்டர்’ என்ற பெயரில், ஒரு புதிய படம் தயாரிக்கிறது. இதில், எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ப்ரியா பவானி ஷங்கர் நடிக்கிறார். குழந்தைகளை முக்கிய கதாபாத்திரங்களாக கொண்ட படம், இது. ‘ஒரு நாள் கூத்து’ படத்தின் மூலம் துணிச்சலான டைரக்டர் என்று பாராட்டப்பட்ட நெல்சன் வெங்கடேசன் இந்த படத்தை இயக்குகிறார். அவர் கூறியதாவது:-

“என் முதல் படத்தில் இருந்து முற்றிலும் வித்தியாசமான படமாக, ‘மான்ஸ்டர்’ இருக்கும். படம் பார்க்கும்போது ரசிகர்கள் இதை உணர்வார்கள். கதாநாயகனாக எஸ்.ஜே.சூர்யாவை தவிர, வேறு யாரும் அவருடைய கதாபாத்திரத்துக்கு பொருந்த மாட்டார்கள். அப்படியொரு பொருத்தம் எஸ்.ஜே.சூர்யாவின் கதாபாத்திரத்துக்கு அமைந்துள்ளது. கதாநாயகி ப்ரியா பவானி சங்கர் தன்னால் முடிந்த அளவுக்கு கதாபாத்திரத்தை புரிந்து கொண்டு நடித்து இருக்கிறார்.

இன்னொரு முக்கிய வேடத்தில், கருணாகரன் நடித்துள்ளார்.”

தொடர்புடைய செய்திகள்

1. மான்ஸ்டர்
நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா - பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் `மான்ஸ்டர்' படத்தின் முன்னோட்டம்.
2. என்னுடன் நடிக்க பிரியா பவானி சங்கர் பயந்தது ஏன்? -எஸ்.ஜே.சூர்யா விளக்கம்
பிரியா பவானி சங்கர் என்னுடன் நடிக்க பயந்தது ஏன்? என்று எஸ்.ஜே.சூர்யா விளக்கமளித்துள்ளார்.