சினிமா செய்திகள்

ஒரு என்ஜினீயரின் கதை, ‘கள்ளபார்ட்’ + "||" + kallapart tamil movie engineer's story

ஒரு என்ஜினீயரின் கதை, ‘கள்ளபார்ட்’

ஒரு என்ஜினீயரின் கதை, ‘கள்ளபார்ட்’
அரவிந்தசாமி-ரெஜினா ஜோடியாக நடித்து வரும் ‘கள்ளபார்ட்’ படம், முடிவடையும் நிலையில் இருக்கிறது.
‘கள்ளபார்ட்’ படத்தின் திரைக்கதை-டைரக்‌ஷன் பொறுப்புகளை ஏற்றுள்ள பி.ராஜபாண்டி கூறியதாவது:-

‘கதாநாயகன் ‘எதிர்பாராத விதமாக ஒரு பிரச்சினையை சந்திக்கிறான். அதை அவன் மதிநுட்பமாக எதிர்கொண்டு, பிரச்சினையில் இருந்து எப்படி வெளியே வருகிறான்? என்பது, இந்த படத்தின் கதை. இதில், கதாநாயகன் அரவிந்தசாமி என்ஜினீயராக வருகிறார். ரெஜினா, பள்ளிக்கூட ஆசிரியையாக வருகிறார். பிரச்சினையை சந்திக்கும் அரவிந்தசாமிக்கு அந்த பிரச்சினையில் இருந்து வெளிவர ரெஜினா உதவுகிறார். அந்த உதவியால் அரவிந்தசாமி எப்படி வெளியே வருகிறார்? என்பதை திரைக்கதை விளக்கும்.

இதில் ஹரிஷ் பெராடி, ஆதேஷ் பாப்ரிகோஷ், பேபி மோனிகா ஆகியோரும் நடிக்கிறார்கள். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். ஆர்.கே. வசனம் எழுதியிருக்கிறார். எஸ்.பார்த்தி எஸ்.சீனா தயாரிக்கிறார்.

வித்தியாசமான கதைக்களம் கொண்ட ‘கள்ளபார்ட்’ அதிரடி சண்டை காட்சிகளுடன் தயாராகிறது. படத்துக்காக, ஏவி.எம். ஸ்டூடியோவில் 3 விதமான அரங்குகள் அமைக்கப்பட்டு, அதில் படப்பிடிப்பு நடைபெற்றது. அரவிந்தசாமி-ரெஜினா சம்பந்தப்பட்ட காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டன.

பெரும்பகுதி காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டன. ஒரு பாடல் காட்சியும், சில காட்சிகளும் படமாக்க வேண்டிய நிலையில், தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறுகிறது.”

தொடர்புடைய செய்திகள்

1. அரவிந்தசாமி-ரெஜினா ஜோடியுடன், ‘கள்ள பார்ட்’
‘கள்ள பார்ட்’ படத்தில் அரவிந்தசாமி ஜோடியாக ரெஜினா நடிக்கிறார்.