சினிமா செய்திகள்

‘‘ஒரு தமிழ் நடிகர் என்னை அழிக்க பார்க்கிறார்’’ ஸ்ரீரெட்டி மீண்டும் புகார் + "||" + "A Tamil actor wants to destroy me" Shri Reddy again complained

‘‘ஒரு தமிழ் நடிகர் என்னை அழிக்க பார்க்கிறார்’’ ஸ்ரீரெட்டி மீண்டும் புகார்

‘‘ஒரு  தமிழ்  நடிகர்  என்னை  அழிக்க  பார்க்கிறார்’’ ஸ்ரீரெட்டி மீண்டும் புகார்
தமிழ், தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்தியவர் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி.
பட வாய்ப்பு தருவதாக படுக்கையில் பயன்படுத்தி ஏமாற்றி விட்டதாக குற்றம் சாட்டினார். தற்போது சென்னையில் குடியேறி இருக்கிறார். அவரது வாழ்க்கை வரலாறு ரெட்டி டைரி என்ற பெயரில் படமாகிறது. இதில் ஸ்ரீரெட்டியும் நடிக்கிறார். நடிகர் லாரன்சும் தனது அடுத்த படத்தில் நடிக்க ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். இந்த நிலையில் ஒரு தமிழ் நடிகர் தனக்கு எதிராக செயல்படுவதாக இப்போது புதிய புகார் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:–


‘‘என்னை பொது கழிப்பிடம் போல் பயன்படுத்துகின்றனர். எனக்கு ஏற்பட்ட வலியும் காயமும் இன்னும் ஆறவில்லை. மனரீதியாக பாதிக்கப்பட்டேன். என்னால்தான் அவை நடந்தன என்பதை நான் அறிவேன். ஆனாலும் படவாய்ப்புக்காக ஒரு பிணத்தை போலவே பயன்பட்டேன்.

எதையும் மனப்பூர்வமாக நான் செய்யவில்லை. என்னை நம்புங்கள். அது எனது வாழ்க்கையின் மோசமான தருணங்கள். அதில் இருந்து எப்படி நான் மீண்டேன்? இப்போது ஒரு தமிழ் கதாநாயகன் எனது சினிமா வாழ்க்கையை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார். அவர் தெலுங்கு திரையுலகினருக்கு நெருக்கமானவர். அவர் ஒரு பெண்பித்தர். இந்த பூமியில் வாழ எனக்கு தகுதி இல்லையா?’’

இவ்வாறு ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. பட வாய்ப்பு தருவதாக படுக்கையில் பயன்படுத்தினார் : நடிகர் நானி மீது ஸ்ரீரெட்டி புகார்
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் சொல்லி திரையுலகை அதிர வைத்தார்.