சினிமா செய்திகள்

‘தக்ஸ் ஆப் இந்துஸ்தான்’ படம் தோல்வி : மன்னிப்பு கேட்ட அமீர்கான் + "||" + 'Tux of Hindustan' film fails: Amir Khan apologized

‘தக்ஸ் ஆப் இந்துஸ்தான்’ படம் தோல்வி : மன்னிப்பு கேட்ட அமீர்கான்

‘தக்ஸ் ஆப் இந்துஸ்தான்’ படம் தோல்வி : மன்னிப்பு கேட்ட அமீர்கான்
அமீர்கான், அமிதாப்பச்சன் நடிப்பில் வெளியான தக்ஸ் ஆப் இந்துஸ்தான் படம் சமீபத்தில் திரைக்கு வந்து பெரிய தோல்வி அடைந்துள்ளது.
இந்தியாவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியானது. ரூ.300 கோடிக்கு மேல் வசூலிக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் எதிர்பார்த்த வசூல் இல்லாததால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர். படத்தின் தோல்விக்காக அமீர்கான் மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-


“தக்ஸ் ஆப் இந்துஸ்தான் பட விஷயத்தில் தவறு செய்து விட்டோம். அதற்கான முழு பொறுப்பையும் நான் ஏற்கிறேன். நல்ல படத்தை கொடுப்பதற்காக கஷ்டப்பட்டு உழைத்தோம். இந்த படம் சிலருக்கு பிடித்தது. ஆனால் அவர்கள் குறைவான எண்ணிக்கையில் உள்ளனர். நிறைய பேருக்கு படம் பிடிக்கவில்லை. ரசிகர்களை சந்தோஷப்படுத்த முடியாமல் போய் விட்டது. இதற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தியேட்டர்களுக்கு மக்கள் மகிழ்ச்சியோடு வந்து படத்தை பார்த்து விட்டு கொண்டாட முடியாமல் திரும்பி சென்றுள்ளனர். படம் குறித்த கருத்துகளை வெளியிட ரசிகர்களுக்கு உரிமை உள்ளது.

படத்துக்கு உழைப்பைத்தான் என்னால் கொடுக்க முடிகிறது. இந்த படத்தில் ரசிகர்களை திருப்திப்படுத்த முடியாமல் போனதற்காக வருத்தப்படுகிறேன். அடுத்தமுறை இன்னும் கடுமையாக உழைப்பேன். நான் நடிக்கும் எல்லா படங்களையும் எனது குழந்தையாகவே பார்க்கிறேன். படம் தோல்வி அடைந்தாலும் அதுவும் எனது குழந்தைதான்.”

இவ்வாறு அமீர்கான் கூறினார்.