சினிமா செய்திகள்

கேரள வெள்ள நிதிக்காக கலை நிகழ்ச்சி : 60 நடிகர்-நடிகைகள் அபுதாபி பயணம் + "||" + Art show for Kerala flood financing: 60 Actor-actresses travel to Abu Dhabi

கேரள வெள்ள நிதிக்காக கலை நிகழ்ச்சி : 60 நடிகர்-நடிகைகள் அபுதாபி பயணம்

கேரள வெள்ள நிதிக்காக கலை நிகழ்ச்சி : 60 நடிகர்-நடிகைகள் அபுதாபி பயணம்
கேரளாவில் சமீபத்தில் பெய்த கன மழையால் வரலாறு காணாத அளவு சேதம் ஏற்பட்டு நூற்றுக்கணக்கானோர் பலியானார்கள்.
நிவாரண முகாம்களில்  10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்கினர்.  ரூ.8 ஆயிரம் கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டதாக மதிப்பிட்டனர். தமிழ் நடிகர்-நடிகைகள் நிதி வழங்கினார்கள்.

வெள்ள நிவாரண நிதி திரட்ட அடுத்த மாதம் (டிசம்பர்) 7-ந்தேதி அபுதாபியில் நட்சத்திர கலைவிழா நடத்த மலையாள நடிகர் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், துல்கர் சல்மான், நிவின் பாலி, பிருதிவிராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் 60 பேர் இந்த கலைநிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள்.


மலையாள திரைப்பட பெண்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள ரம்யா நம்பீசன், மஞ்சுவாரியர், கீது மோகன்தாஸ், பார்வதி, பத்மபிரியா, ரீமா கல்லிங்கல் உள்ளிட்டோரையும் விழாவுக்கு அழைத்துள்ளனர். தமிழ் பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் மலையாள நடிகை நயன்தாராவையும் மேலும் சில தமிழ் நடிகர்-நடிகைகளையும் நட்சத்திர கலைவிழாவுக்கு அழைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்காக அடுத்த மாதம் 9-ந்தேதிவரை படப்பிடிப்புகளை ரத்து செய்யும்படி மலையாள நடிகர் சங்கம், அங்குள்ள தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு கடிதம் அனுப்பி உள்ளது. நடிகர் சங்கத்தின் பொருளாளர் ஜகதீஷ் கூறும்போது, “கலைநிகழ்ச்சிக்காக நடிகர்-நடிகைகள் இன்று முதல் ஒரு வாரம் ஒத்திகையில் ஈடுபடுவார்கள். தினமும் 5 மணிநேரம் இந்த ஒத்திகை நடக்கும்” என்றார்.