சினிமா செய்திகள்

அமலாபாலுடன் 2-வது திருமணமா? நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம் + "||" + 2nd marriage with amalapaul Actor Vishnu Vishal explains

அமலாபாலுடன் 2-வது திருமணமா? நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம்

அமலாபாலுடன் 2-வது திருமணமா? நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம்
நடிகர் விஷ்ணு விஷால் சமீபத்தில் மனைவி ரஜினியை விவாகரத்து செய்தார். இதனை டுவிட்டரில் அவரே வெளியிட்டார்.
அமலாபாலும் காதல் திருமணம் செய்த கணவர் டைரக்டர் விஜய்யை விவாகரத்து செய்து விட்டு படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார். மீண்டும் திருமணம் எப்போது என்று அவரிடம் கேள்வி எழுப்பியபோது இன்னும் அதுபற்றி சிந்திக்கவில்லை என்று கூறி வந்தார்.


இந்தநிலையில் விஷ்ணு விஷாலும் அமலாபாலும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இருவரும் ராட்சசன் படத்தில் ஜோடியாக நடித்தனர். அந்த படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடியது. படப்பிடிப்பில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்து இருக்கலாம் என்றே பலரும் நம்பினார்கள்.

இருவருக்கும் வாழ்த்துகளையும் பதிவிட்டபடி இருந்தனர். இது தமிழ் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தகவல் உண்மைதானா? என்றும் சிலர் விசாரிக்க தொடங்கினர். இதனை விஷ்ணு விஷால் மறுத்துள்ளார். டுவிட்டர் பக்கத்தில், “இது ஒரு அபத்தமான செய்தி. தயவு செய்து பொறுப்புடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறேன். நாங்களும் மனிதர்கள்தான். எங்களுக்கும் வாழ்க்கை உள்ளது. குடும்பம் இருக்கிறது. எழுத வேண்டும் என்பதற்காக எதையும் எழுத வேண்டாம்” என்று கூறியுள்ளார்.

விஷ்ணு விஷால் இப்போது சிலுக்குவார் பட்டி சிங்கம். இடம் பொருள் ஏவல், ஜகஜால கில்லாடி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.