சினிமா செய்திகள்

மலையாள படத்தில், விஜய் சேதுபதி + "||" + In Malayalam film, Vijay Sethupathi

மலையாள படத்தில், விஜய் சேதுபதி

மலையாள படத்தில், விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார். வயதான தோற்றம், ரவுடி, போலீஸ் அதிகாரி என்று படத்துக்கு படம் மாறுபட்ட கதாபாத்திரங்களை ஏற்கிறார்.
விஜய் சேதுபதி வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார். வயதான தோற்றம், ரவுடி, போலீஸ் அதிகாரி என்று படத்துக்கு படம் மாறுபட்ட கதாபாத்திரங்களை ஏற்கிறார். நானும் ரவுடிதான், சேதுபதி, தர்மதுரை, விக்ரம் வேதா என்று தொடர்ந்து அவர் நடித்து திரைக்கு வந்த பல படங்கள் நல்ல வசூல் பார்த்துள்ளன.

சமீபத்தில் திரைக்கு வந்த 96 படத்துக்கும் வரவேற்பு கிடைத்தது. இப்போது சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ் படங்களிலும் புதுமையான வேடம். சீதக்காதியில் முதியவர், சரித்திர காலத்து மன்னர் வேடங்கள் ஏற்றுள்ளார். சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக வருகிறார். ரஜினிகாந்துடன் பேட்ட படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

இதில் வில்லனாக நடிப்பதாக தகவல். இடம்பொருள் ஏவல் என்ற படமும் கைவசம் உள்ளது. மற்ற மொழி படங்களில் இருந்தும் விஜய் சேதுபதிக்கு வாய்ப்புகள் வருகின்றன. தெலுங்கில் சிரஞ்சீவியுடன் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடிக்கிறார். இதில் படை தளபதியாக நடிப்பதாக கூறுகின்றனர். மெகா பட்ஜெட்டில் தயாராகி உள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் விரைவில் திரைக்கு வருகிறது.

அடுத்து மலையாள படத்துக்கும் ஒப்பந்தமாகி உள்ளார். இதில் ஜெயராம் கதாநாயகனாக நடிக்கிறார். சாஜன் கலத்தில் டைரக்டு செய்கிறார். இதில் விஜய் சேதுபதிக்கும் கதாநாயகனுக்கு இணையான வேடம் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. அமீர்கான் படத்தில் விஜய் சேதுபதி!
அமீர்கான் நடிக்க இருக்கும் ஒரு புதிய இந்தி படத்தில், அவருடன் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கிறார்.
2. கதாநாயகி தந்தை வேடத்தில் விஜய் சேதுபதி
கதாநாயகியின் தந்தை வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார்.
3. கனடா பட விழாவில் திரையிட விஜய் சேதுபதி படம் தேர்வு
கனடா பட விழாவில் திரையிட நடிகர் விஜய் சேதுபதியின் படம் தேர்வாகி உள்ளது.
4. இணையதளத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா படங்கள் - படக்குழுவினர் அதிர்ச்சி
இணையதளத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோரின் படங்கள் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.