சினிமா செய்திகள்

ரசிகர் குடும்பத்துக்கு நடிகர் சூர்யா உதவி + "||" + Actor Surya helps the family

ரசிகர் குடும்பத்துக்கு நடிகர் சூர்யா உதவி

ரசிகர் குடும்பத்துக்கு நடிகர் சூர்யா உதவி
நடிகர் சூர்யாவின் நற்பணி இயக்கத்தின் சேலம் கிழக்கு மாவட்ட தலைவராக இருந்த மணிகண்டன் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.
நடிகர் சூர்யாவின் நற்பணி இயக்கத்தின் சேலம் கிழக்கு மாவட்ட தலைவராக இருந்த மணிகண்டன் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். 35 வயதான இவர் டீக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் சூர்யா சேலம் மாவட்டம் ஆத்தூர் ஜோதிநகரில் உள்ள மணிகண்டன் வீட்டுக்கு சென்றார்.

இரவு 10 மணிக்கு மேல் அங்கு சென்றதால் யாருக்கும் தெரியவில்லை. இதனால் அங்கு கூட்டமும் கூடவில்லை. மணிகண்டனின் மனைவி தேன்மொழி, மகள் பிரதீபா ஆகியோருக்கு சூர்யா ஆறுதல் கூறினார். மணிகண்டனின் மகள் படிப்பு செலவை ஏற்றுக்கொள்வதாக உறுதி அளித்தார். இந்த குடும்பம் இனிமேல் என்னுடையை குடும்பம் அனைத்து உதவிகளையும் செய்து தருகிறேன் என்றும் கூறினார். அதை கேட்டு மணிகண்டன் மனைவியும் உறவினர்களும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.